மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த வாலிபர் கைது:1 ஆயிரத்து 400 மதுபாட்டில்கள் பறிமுதல்

3 July 2021, 7:31 pm
Quick Share

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 1 ஆயிரத்து 400 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் மதுபானங்களை சிலர் பதுக்கி விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அந்த வகையில் திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் மற்றும் சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் போலீசார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திண்டுக்கல் நத்தம் சாலையில் நல்லாம்பட்டி பிரிவு அருகே மறைவான ஒரு காட்டுப் பகுதியில் டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனை செய்த திண்டுக்கல் மாவட்டம் நத்தம் நடுவனூர் பகுதியைச் சேர்ந்த ஜெயபாண்டி என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 1 ஆயிரத்து 400 அரசு டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 111

0

0