மூதாட்டி கொலை செய்த வழக்கில் இளைஞர் கைது: தங்கநகை,பணம், செல்போன் ஆகியவை பறிமுதல்

5 May 2021, 9:18 pm
Quick Share

ஈரோடு: ஈரோட்டில் பணத்திற்காக மூதாட்டி கொலை செய்த வழக்கில் இளைஞரை போலீசார் கைது செய்து, அவனிடமிருந்த தங்கநகை,பணம், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஈரோடு மாணிக்கம் பாளையம் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தனியாக இருந்த மணிமேகலை என்ற மூதாட்டியை மர்ம நபர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு மூதாட்டி அணிந்திருந்த 4 பவுன் தங்க நகையை பறித்து சென்றார். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வீரப்பன்சத்திரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையின் போது, மணிமேகலைக்கு அடிக்கடி கார் ஓட்டுவதற்காக வரும் பிரபு என்ற இளைஞர் சம்பவத்தன்று வந்து சென்றது தெரிய வந்தது.

இதனையடுத்து அந்த இளைஞரை கருங்கல்பாளையம் அருகே கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மணிமகலை அணிந்திருந்த நகைக்காக கொலை செய்ததாக தெரிவித்தார். இதனையடுத்து அவரிடமிருந்து தங்கநகைகள்,பணம் , செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறைகாவலக்கு அனுப்பி வைத்தனர்.

Views: - 142

0

0