வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது: 1 கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல்

17 July 2021, 8:48 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் விற்பனைகாக வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி கோவிந்தசாலை கண்டாக்டர் தோட்டம் பகுதியில் அதிக அளவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று கண்காணித்து வந்த போலீசார் அவ்விடத்தில் சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், அவன் அதே பகுதியை சேர்ந்த முகேஷ் @ வாழக்காய் என்றும், அவன் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக தனது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதும் கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவன் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து அவனுக்கு கஞ்சா எங்கிருந்து கிடைத்தது என்று அவனிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆந்திரா மாநிலம் நெல்லூரில் உள்ள அவனது பாட்டி விட்டுக்கு சென்று விட்டு வரும் போது கஞ்சா வாங்கி வந்தை ஒப்புகொண்டுள்ளான். இதனை அடுத்து முகேஷ் மீது வழக்கு பதிந்த போலிசார், அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தொடர்ந்து தமிழகம் மற்றும் ஆந்திரா பகுதிகளிலிருந்து புதுச்சேரிக்கு கஞ்சா வருவதை தடுக்க போலிசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டுத்தப்பட்டுள்ளனர் என கிழக்கு காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Views: - 319

0

0