கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது: 2.5 கிலோ கஞ்சா பறிமுதல்

16 July 2021, 11:41 pm
Quick Share

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்த தனிப்படை போலீஸார் அவரிடமிருந்து 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பட்டவர்த்தி பாலம் அருகில் உள்ள திடலில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங்கிற்கு ரகசிய தகவல் சென்றது. இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில், தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்த இளைஞரைப் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், அவர் இளந்தோப்பு மெயின்ரோட்டைச் சேர்ந்த குமார் மகன் கோகுல் பிரசாத் என்பதும்,

அவர் தனது வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு சென்று திடலில் வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரது வீட்டுக்குச் சென்று சோதனை செய்த போலீஸார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, கஞ்சாவையும், விற்பனையில் ஈடுபட்ட கோகுல்பிரசாத்தையும் மணல்மேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து, மணல்மேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 128

0

0