வட மாநிலத் தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞர் கைது: விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 600 கிராம் கஞ்சா பறிமுதல்.!!

11 April 2021, 7:36 pm
Quick Share

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே வட மாநிலத் தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்து, விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 600 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அதனை சுற்றியுள்ள சிப்காட் தொழிற் பூங்காக்களில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் வாடகைக்கு குடியிருந்து தொழிற்சாலைகளில் வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்கு சிலர் கஞ்சா சப்ளை செய்து வருவதாக காவல் தறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. அதன்பேரில் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சிப்காட் தொழிற் பூங்காக்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். அப்போது தண்டலம் பகுதியில் ரோந்து சென்ற போலீசாரை கண்டு இளைஞர் ஒருவர் தப்பி ஓடினார்.

இதையடுத்து தப்பிய சென்ற இளைஞரை பிடித்து சோதனை செய்ததில் அவரிடம் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து இளைஞரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் அவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (20) என்பதும் இங்கு உள்ள வட மாநிலத் தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து தமிழ்செல்வன் இடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 600 கிராம் எடையுள்ள கஞ்சாவை கைப்பற்றிய போலீசார் தமிழ்ச்சல்வனை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Views: - 34

0

0