மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

24 November 2020, 11:14 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி கிராமப்பகுதிகளில் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி அருகே உள்ள கிராமப்பகுதிகளில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை குறி வைத்து மர்ம நபர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து புதுச்சேரி அருகே தாணம்பாளையம் கிராமப்பகுதியில் உள்ள கல்லூரி சாலை சந்திப்பில் தவளகுப்பம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகப்படும் படியாக இருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியதில்,

அவர் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த வாலிபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், அவர் பாகூர் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் இருந்து 162 கிராம் அளவுள்ள மொத்தம் 35 பொட்டலங்களை பறிமுதல் செய்து கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Views: - 0

0

0