காட்பாடியில் கார் திருடிய வாலிபர் கைது…

Author: Udhayakumar Raman
6 September 2021, 1:54 pm
Quick Share

வேலூர்: காட்பாடியில் கார் திருடிய பேர்ணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காட்பாடி காந்தி நகர் 3வது மெயின் ரோட்டில வசித்துவருபவர் சீனிவாசன் இவர் சொந்தமாக கார் மெக்கானிக் கடை வைத்துள்ளார். இந்நிலையில் வீட்டின் எதிரில் நிறுத்தி வைத்திருந்த மாருதி ஆல்டோ கார் திருடு போய்விட்டது. உடனே விருதம்பட்டு காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. புகாரை விசாரித்த உதவி ஆய்வாளர் ஆதர்ஷ் கார் திருடிய வாலிபரை வலை வீசி தேடி வந்தனர். பரதராமி அடுத்த டி.பி.பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஏகாம்பரம் மகன் சேட்டு என்பவரை கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் கார் திருடியதை ஒப்புக்கொண்டார். உடனே உதவி ஆய்வாளர் காரை பறிமுதல் செய்து வாலிபரை கைது செய்து நீதிமன்றம் முன் ஆஜர்படுத்தினர். புகார் அளித்த சுமார் ஒன்பது மணி நேரத்திற்குள் வாலிபரையும் காரையும் பறிமுதல் செய்த உதவி ஆய்வாளர் ஆதர்ஷ்க்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்தனர்.

Views: - 369

0

0