இளைஞர் வெட்டிக் கொலை: கணவன்-மனைவி உள்ளிட்ட 4 பேர் கைது

1 December 2020, 11:18 pm
Quick Share

திருவள்ளூர்: மப்பேடு அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கணவன்-மனைவி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் இவரை கடந்த 24ஆம் தேதி மர்ம கும்பல் ஒன்று வெட்டி கொலை செய்தது இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்ட மப்பேடு காவல்துறையினர் கொலையாளிகளை தேடி வந்த நிலையில், திருவள்ளூர் டிஎஸ்பி துரை பாண்டியன் தலைமையிலான தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில்,

புதுப்பட்டு பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரது மனைவி சத்ய தேவியை நாகராஜ் பாலியல் தொந்தரவு செய்ததால் நாகராஜை திட்டம் போட்டு கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து அப்பெண்ணின் கணவர் ராஜாவிடம் தெரிவித்ததை அடுத்து அவர் அவரது நண்பர்களுடன் 2பேருடன் சேர்ந்து நாகராஜனை வெட்டிக் கொன்றது தெரியவந்தது. புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சத்ய தேவி, கணவர் ராஜா, அஜித், கார்த்தி ஆகிய 4 மீதும் மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து தேடிவந்த நிலையில்,

ராஜாவின் மனைவியை மப்பேடு போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் ராஜா உள்ளிட்ட அவரது நண்பர்கள் 3 பேரையும் போலீசார் தேடி வந்த நிலையில், மூன்று பேர் இந்த கொலை தொடர்பாக நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

Views: - 0

0

0