பனை மரத்திலிருந்து கீழே விழுந்ததில் வாலிபர் பலி: போலீசார் விசாரணை

4 July 2021, 5:57 pm
Quick Share

தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் அருகே கே.கைலாசபுரத்தில் நுங்கு வெட்டுவதற்காக பனை மரத்தில் ஏறிய வாலிபர் கீழே விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் குறித்து நாரைக்கிணறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓட்டபிடாரம் அருகே கே.கைலாசபுரம் மேல தெருவைச் சேர்ந்த வெள்ளத்துரை, சிவகாமி தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் இரண்டாவது மகன் சுந்தரலிங்கம் (23) திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஜேசிபி டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ஒரு சில நாட்களுக்கு முன்னர் ஊருக்கு வந்துள்ளார் .இந்நிலையில் தனது நண்பர்களுடன் நேற்று ஜூலை 3 அன்று மாலையில் கே.கைலாசபுரம் பகுதியில் நுங்கு வெட்டுவதற்காக சென்றனர். அப்போது நுங்கு வெட்டுவதற்காக பனை மரத்தில் சுந்தரலிங்கம் ஏறியுள்ளார்.

அப்போது சுந்தரலிங்கம் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்துள்ளார் . இதையடுத்து அவரது நண்பர்கள் அவரை மீட்டு ஆட்டோவில் புளியம்பட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் சங்கரலிங்கம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நாரைக்கிணறு போலீசார் இறந்த சுந்தரலிங்கம் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி ஹைகிரவுண்ட் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Views: - 35

0

0