ஊரடங்கில் சாலையில் விளையாடும் இளைஞர்கள்: கோவையில் கேள்விகுறியாகும் ஊரடங்கு

16 May 2021, 10:08 pm
Quick Share

கோவை: கோவையில் விழிப்புணர்வு இல்லாமல் சாலையில் விளையாடும் சிறுவர்களுடன் இளைஞர்களும் சேர்ந்து விளையாடி வருவதால் ஊரடங்கு கேள்விகுறியாகி வருகிறது.

தமிழக அரசு நோயை கட்டுப்படுத்த முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவையில் நோய்தொற்று அதிகரித்து, சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் நாள்முழுவதும் ஆம்புலன்ஸ்களில் காத்திருக்கும் சூழ்னிலையில், கோவை கோட்டைமேடு, இக்பால் திடல் வின்செண்ட் சாலை, புல்லுக்காடு, ஜி.எம்.நகர், பொன்விழா நகர், சாரமேடு போன்ற பகுதிகளில் சிறுவர்களும், இளைஞர்களும் சாலையில் முககவசம், இன்றி நோயை பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் சர்வசாதாரணமாக விளையாடி வருகிறார்கள்.

மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும், கோவையில் செயல்பாடற்று நிற்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இளைஞர்களின் இதுபோன்ற பொறுப்பற்ற செயல்கள் நோய்தொற்றை அதிகரிக்க செய்யும், ஆபத்து உள்ளது.காவல் துறையினர் நோய்பரப்பும் விதமாக பொதுவெளியில் நடமாடும், மற்றும் விளையாடி வரும் இளைஞர்களை பிடித்து கண்டித்து அவர்களுக்கு அறிவுரை வழங்கி நோய்பரவலை தடுக்கும் நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் விரைந்து நடவடிக்கை எடுத்து மக்களை காப்பாற்றவேண்டும். என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

Views: - 48

0

0