பட்டா கத்தியை காட்டி மிரட்டி மளிகை பொருட்களை வாங்கி சென்ற வாலிபர்கள் கைது

16 June 2021, 11:29 pm
Lovers Arrest - Updatenews360
Quick Share

சென்னை: கொடுங்கையூரில் பட்டா கத்தியை காட்டி மிரட்டி , தாக்கி விட்டு மளிகை கடையில் பொருட்களை வாங்கி சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த பட்டா கத்தியை பறிமுதல் செய்தனர்.

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 119 வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் கொடுங்கையூர் தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த 3 நபர்கள் பொருட்களை வாங்கி விட்டு பணம் தராமல் சந்திரசேகரை பட்டா கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்கள் வைத்திருந்த பட்டா கத்தியை வைத்து சந்திரசேகரை தாக்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கடைக்காரர் கடையை விட்டு ஓடி வந்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் கொளத்தூர் விநாயகபுரம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் வயது 24 மற்றும் கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த யுவராஜ் வயது 26 ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு பட்டாக்கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 107

0

0