கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட வாலிபர்கள் கைது: அவர்களிடமிருந்து 1.25 கிலோ கஞ்சா பறிமுதல்

Author: Udhayakumar Raman
29 August 2021, 9:31 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட வாலிபர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 1.25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரியில் ஆப்ரேஷன் விடியல் என்ற பெயரில் மாநிலம் முழவதும் கஞ்சா விற்பனை செய்பவர்களை போலிசார் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் அரியாங்குப்பம் பகுதியில் இளைஞர்கள் சிலர் கஞ்சா குடிப்பதை கண்ட அரியாங்குப்பம் போலீசார் அவர்களை பிடித்து அவர்களுக்கு எங்கிருந்து கஞ்சா கிடைக்கிறது என்று விசாரித்த போது, மேட்டுபாளையம் பகுதியில் இருந்து சில வாலிபர்கள் தினமும் அரியாங்குப்பம் சொபர்னிகா நகரில் வந்து கஞ்சா விற்பனை செய்து விட்டு போவதாக தெரிவித்தனர். இதனை அடுத்து போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணித்த போது சந்தேகபடும் படியாக இருந்த 4 வாலிபர்களை பிடித்து விசாரணை செய்த போது,

அவர்கள் கஞ்சா விற்பனை செய்வது தெரிந்தது தொடர்ந்து அவர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் புதுச்சேரி வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த ஜானகிராமன், ரோகேஷ், ஞானபிரபு, சீனு என்பதும், அவர்கள் பாலிடெக்னிக் படித்து முடித்து விட்டு வேலை இல்லாத காரணத்தினால் தமிழக பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனையில் ஈடுப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களிடமிருந்து 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1.25 கிலோ கஞ்சா, 1 இரு சக்கர வாகனம் மற்றும் 3 செல்போஃன்களை பறிமுதல் செய்து, கைது செய்யப்பட்ட வாலிபர்களை சிறையில் அடைத்தனர்.

Views: - 261

0

0