நண்பரின் தாயுடைய நகையை திருடிய இளைஞர்கள் கைது

21 January 2021, 9:57 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் நண்பரின் தாயுடைய 40 சவரன் நகையை திருடிய இளைஞர்களை போலீசார் கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி வெண்ணிலா நகரை சேர்ந்த அரசு செவிலியரான நிவேதிதா தனது மகன் ஸ்டீபன் ராஜூடன் வசித்து வருகிறார். இதனிடையே கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டின் பீரோவில் இருந்த 40சவரன் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் சந்தேகத்தின் பேரில், ஸ்டீபன் ராஜூன் நபரான மிஷேல் சுதன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது நகையை திருடியதை ஒப்புக்கொண்டார். கடந்த 3மாதங்களாக வீட்டின் பீரோவில் இருந்து சிறுக, சிறுக 40 சவரன் நகைகளை திருடி நண்பர்கள் கிஷோர் மற்றும் சூர்யா ஆகிய இருவரின் உதவியோடு விற்பனை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர் கிஷோர், சூர்யாவை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 40சவரன் நகையை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

Views: - 0

0

0