டேனியல் ராட்கிளிப் புத்தகத்தை அதிகம் பேர் பேசிய ஒலிநூல் என்ற தலைப்பில் கின்னஸ் சாதனை ..

18 November 2020, 12:39 pm
Quick Share

கோவை: கோவையை சேர்ந்த டாக்டர் சுப்ரமணியம் உலகிலேயே நீண்ட தலைப்பை உடைய , ‘ டேனியல் ராட்கிளிப் புத்தகத்தை அதிகம் பேர் பேசிய ஒலிநூல் என்ற தலைப்பில் கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.

வயதை காரணம் காட்டி , ஒதுங்கி அமர்ந்து விடுபவர்கள் மத்தியில் , அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளார் டாக்டர் சுப்ரமணியன் . 63 வயதான டாக்டர் சுப்ரமணியன் ஒரு எழுத்தாளர் என்ற அவரது பயணத்தில் , வரலாற்று பக்கங்களை அவரே எழுதியுள்ளார் . ஒலிநுாலின் அதிகம் பேசியவர் ‘ என்ற சாதனையை எட்ட அவர் முயற்சியை மேற்கொண்டார் .

இதற்காக அவர் , உலகிலேயே நீண்ட தலைப்பை உடைய , ‘ டேனியல் ராட்கிளிப் ( 28.167 எழுத்துக்கள் மற்றும் 5532 வார்த்தைகளை முகப்பு பக்கத்தில் கொண்டது ) என்ற , அவர் எழுதிய புத்தகத்தை தேர்வு செய்தார் .

கின்னஸ் உலக சாதனை நாளில் நடந்த இந்த நிகழ்ச்சியை கின்னஸ் உலக சாதனைகள் , ‘ அதிகம் பேர் பேசிய ஒலிநூல் என்ற தலைப்பில் அங்கீகரிக்கப்பட்டது . இந்த ஒலி நுாலில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான 31 கலைஞர்கள் பங்கேற்று பேசியுள்ளனர் . இதற்கு முன்னர் 20 கலைஞர்கள் பேசிய நூலின் சாதனையை இது முறியடித்துள்ளது .

இதற்கு முன் அவர் பல கின்னஸ் சாதனைகளை செய்துள்ளார் . 2006 ல் . மிக நீண்ட கம்ப்யூட்டர் வகுப்பு நடத்தினார் . இதில் , முழுவதிலும் இருந்து 16 நாடுகளை சேர்ந்த 1934 மாணவர்கள் பங்கேற்றனர் . 2012 ல் , வேகமான நகர்படங்களை ( அனிமேட்டர் ) உருவாக்கியவர் என்ற சாதனையையும் பெற்றார் . தொடர்ச்சியாக 6 மணி தொடர்ச்சியாக பாடங்களை நடத்தி லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0