கல்லறை திருநாள் இன்று அனுசரிப்பு- முன்னோர்களுக்கு அஞ்சலி..

2 November 2020, 9:25 am
Quick Share

கோவை: கல்லறை திருநாளையொட்டி கோவை திருச்சி சாலையில் சி.எஸ்.ஐ.கல்லறை தோட்டத்தில் பிரார்த்தனை செய்ய வந்தவர்களை நெரிசலை தவிர்க்கும் வகையில் ஒருவர் பின் ஒருவராக உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

கிறிஸ்தவர்கள் இறந்த பிறகு கல்லறைகளில் அடக்கம் செய்யப்படுகின்றனர். இவ்வாறு அடக்கம் செய்யப்படும் மரணமடைந்த ஆன்மாக்களுக்கு சகல ஆத்மாக்களின் திருநாள் என ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ந் தேதி கல்லறை திருநாள், என்ற பெயரில் கடைப்பிடிக்கப்படுகிறது.


இந்த தினத்தில் மரணமடைந்தவர்களின் உறவினர்கள் அவர்களது கல்லறைகளுக்கு சென்று பிரார்த்தனை செய்வர். இந்நிலையில் கொரோனா கால ஊரடங்கால் அரசு விதிமுறைகளின் படி மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் விதமாக , கோவை திருச்சி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ.கல்லறை தோட்டத்தில் கல்லறைகளுக்கு பிரார்த்தனை செய்ய வந்தவர்களை ஒருவர் பின் ஒருவராக உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு,கல்லறை திருநாளையொட்டி,கிறிஸ்தவர்கள்,கல்லறைகளை கழுவி, பூக்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி, ஊதுபத்தி போன்றவற்றை ஏற்றி, ஜெபங்கள் செய்தும்,கிறிஸ்தவ பாடல்களைப் பாடி, பின்னர் கண்களை மூடி அமைதியாக பிரார்த்தனை செய்வதும், கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

Views: - 28

0

0

1 thought on “கல்லறை திருநாள் இன்று அனுசரிப்பு- முன்னோர்களுக்கு அஞ்சலி..

Comments are closed.