கோவையில் நடு ரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்..

2 November 2020, 9:19 am
Quick Share

கோவை: கோவையில் சாலையின் நடுவே கார் ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை-அவிநாசி பிரதான சாலையில் குப்புசாமி நாயுடு மருத்துவமனை அருகே பெட்ரோல் பங்கில் அழகர் என்பவர் நேற்று மாலை தனது காருக்கு டீசல் நிரப்ப சென்றுள்ளார்.

அப்பொழுது காரின் முன்புறம் புகை வந்ததை அறிந்த ஊழியர்கள் வாகனத்தை உடனடியாக சாலையில் நிறுத்தும் படி கேட்டுள்ளனர்.

உடனடியாக காரை அவினாசி சாலையில் நிறுத்தினார். நிறுத்திய சில நிமிடங்களில் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் வருவதற்கு முன்பாகவே காரின் முன்புறம் மற்றும் எஞ்சின் எரிந்து முழுவதுமாக எரிந்தது.

கொழுந்துவிட்டு எரிந்த தீயினால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இரவு நேரம் என்பதால் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை. தொடர்ந்து வந்த தீயணைப்பு துறையினர் கரில் பிடித்திருந்த தீயை அணைத்தனர்.

Views: - 15

0

0