சியோமி: தனது முதல் காரை 2024 ஆம் ஆண்டில் பெருமளவில் தயாரிப்பதாக அறிவிப்பு!!!

Author: Hemalatha Ramkumar
20 October 2021, 2:12 pm
Quick Share

சீன நிறுவனம் 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தனது கார்களை பெருமளவில் உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாக சியோமியின் தலைமை நிர்வாகி லீ ஜுன் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் ஸ்மார்ட் எலக்ட்ரிக் வாகன வணிகத்தில் நிறுவனம் நுழைவதாக அறிவித்ததில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை.

எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய வணிகத்தில் வேலை செய்வதற்காக ஒரு புதிய துணை நிறுவனத்தை நிறுவுவதாக நிறுவனம் உறுதி செய்தது. இப்போது, ​​சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் நிர்வாகி ஒரு முதலீட்டாளர் நிகழ்வில் இது குறித்த இன்னும் பல விவரங்களைப் பகிர்ந்துள்ளார். அதன் மின்சார கார்களின் பெருமளவு உற்பத்தி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Xiaomi இன் சர்வதேச சந்தைப்படுத்தல் துறையின் இயக்குநராக இருக்கும் Zang Ziyuan, தனது சரிபார்க்கப்பட்ட Weibo கணக்கில் நிறுவனத்தின் சமீபத்திய வளர்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். சீனாவின் மின்சார வாகன சந்தை ஏற்கனவே பல நபர்களை ஈர்த்துள்ளது மற்றும் சியோமி அதன் போட்டியாளர்களான நியோ, எலோன் மஸ்கின் டெஸ்லா மற்றும் மற்றவர்களை எதிர்கொள்ளும்.

சியோமி நிறுவனத்தின் புதிய மின்சார வாகனம் (EV) இந்த பிரிவின் அடுத்த முக்கிய இலக்கைக் குறிக்கும். சமீபத்திய வளர்ச்சி உறுதிப்படுத்தப்பட்ட பிறகு அதன் பங்குகள் கிட்டத்தட்ட 5.4 சதவீதம் உயர்ந்ததாக சியோமி தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், சீன நிறுவனம் 10 வருட காலப்பகுதியில் சுமார் 10 பில்லியன் யுவான் (சுமார் $ 1.5 பில்லியன்) முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. சியோமியின் தலைமை நிர்வாக அதிகாரி லீ ஜுன், புதிய ஸ்மார்ட் மின்சார வாகன நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றுவார்.

இந்த புதிய வணிகத்தில் எந்த வகை மின்சார வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது என்ற விவரங்களை சியோமி இன்னும் வெளியிடவில்லை. இந்த ஆண்டு ஆகஸ்டில் அதன் EV பிரிவின் வணிகப் பதிவை முடித்ததாகக் கூறப்படுகிறது. சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஏற்கனவே யூனிட்டுக்கான பணியமர்த்தலை அதிகரித்திருப்பதாக பத்திரிக்கைகள் தெரிவித்துள்ளன. இருப்பினும் சியோமி காரை சுயாதீனமாக உற்பத்தி செய்வதா அல்லது ஏற்கனவே இருக்கும் கார் தயாரிப்பாளருடன் இணைவதா என்பதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

Views: - 166

0

0