நெருக்கமாக நடிக்க கூச்சப்பட்ட விக்ரம் … கிட்டவந்து ஐஸ்வர்யா ராய் கொடுத்த தைரியம்!

Author: Rajesh
9 December 2023, 12:32 pm
vikram
Quick Share

படத்திற்கு படம் வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகர் என பெயரெடுத்தவர் நடிகர் விக்ரம். இவர் தமிழில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்து வருகிறார். என் காதல் கண்மணி படத்தின் மூலம் 1990ல் அறிமுகமானார்.

அதன் பின்னர் தொடர்ந்து பல தோல்வி படங்களில் நடித்து துவண்டுபோன விக்ரமுக்கு சேது படம் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன் பின்னர் காசி, ஜெமினி, தூள் , பிதாமகன் , அந்நியன் , தெய்வத்திருமகள் உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

படத்திற்கு படம் தனது முழு உழைப்பை போட்டு திறமையான நடிப்பை வெளிப்படுத்தி அந்த படத்திற்காக தனது இயக்குனர் எப்படி கேட்கிறாரோ அப்படி உடலை வருத்தி திறமையான நடிகராக பார்க்கப்படுபவர் விக்ரம். திரைத்துறையில் போட்டிகள் பொறாமைகள் இன்றி ஜீரோ ஹேட்டர்ஸ் என்ற பெயரெடுத்திருக்கிறார்.

அப்படித்தான் இராவணன் படத்தில் அவரது கேரக்டர் ரசிகர்களை வியக்கவைத்தது. அப்படத்தில் ஐஸ்வர்யா உடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க விக்ரம் முதலில் மிகவும் தயங்கினாராம். அதை புரிந்துக்கொண்ட ஐஸ்வர்யா ராய். இங்க கூச்சப்படுவதற்கு ஒண்ணுமே இல்லை. நான் ஒரு நடிகை அவ்வளவு தான். நாம் நடிக்கும் படத்தின் காட்சிக்கு இப்படி பண்ணவேண்டியிருக்கு என பேசி தைரியம் கொடுத்தாராம். அதன் பின்னர் அவர்கள் கெமிஸ்ட்ரி அடிதூள் கிளப்பியது.

ஆனால், பிரசாந்தின் அப்பா மிகப்பெரிய தயாரிப்பாளார் என்பதால் அவர் தன் மகனை சீக்ரத்திலே வளர்த்துவிட்டார். அந்த சமயத்தில் வாய்ப்பில்லாமல் இருந்த விக்ரம் பிரசாந்த் வீட்டு கதவை தட்டி வாய்ப்பு கேட்டாராம். ஆனால் அவரது குடும்பமே விக்ரமை உதாசீனப்படுத்திவிட்டார்களாம்.

நிலைமை இப்படி இருக்க ராவணன் படத்தில் விக்ரமும், ஐஸ்வர்யா ராயும் சேர்ந்து நடித்தார்கள். அப்போது இருவரும் ஏறக்குறைய நெருக்கமாக நடிக்க வேண்டிய காட்சி ஒன்று இருந்தது. ஆனால் அமிதாப்பின் மருமகள், அபிஷேக்கின் மனைவி ஐஸ்வர்யா ராய். அவருடன் எப்படி நெருக்கமாக நடிப்பது என்ற பதற்றம் விக்ரமுக்கு இருந்தது. அதை புரிந்துகொண்ட ஐஸ்வர்யா ராய், விக்ரமிடம் வந்து அதெல்லாம் ஒன்றும். நான் ஒரு நடிகைதான். இந்த கேரக்டருக்கு தேவைப்படுகிறது. அதனால் எந்தப் பதற்றமும் இல்லாமல் நடியுங்கள் என தைரியம் சொன்னார்” என்றார்.

Views: - 180

0

0