‘சாதிக்க பணம் தேவையில்லை’: 1022 கி.மீ., நடந்து சாதித்த கேரள இளைஞர்கள்..!!

19 June 2021, 2:56 pm
Quick Share

நாகர்கோவில்: பணம் இல்லாமலும் எதையும் சாதிக்க முடியும் என்பதை 1022 கி.மீ., நடந்து வந்து இரண்டு இளைஞர்கள் நிரூபித்துள்ளனர்.

கேரளாவின் காசர்கோடு மாவட்டம் கம்மாடம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரம்சாத். 24 வயதான இவர் பட்டதாரி. பானத்துாரைச் சேர்ந்தவர் அஸ்வின் பிரசாத். 20 வயதான இவர் பிளஸ் 2 படித்துள்ளார். நண்பர்களான இவர்கள் பணம் இல்லாமல் சாதனை நிகழ்த்த முடியும் என்பதை நிரூபிக்க மார்ச் 26ம் தேதி காசர்கோட்டில் இருந்து நடைபயணம் தொடங்கினர்.

பொது மக்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டும், இரவில் பெட்ரோல் பங்குகளில் தங்கியும் 1022 கி.மீ., துாரம் நடந்து நேற்று கன்னியாகுமரி வந்தனர். கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் பயணத்தை நிறைவு செய்துள்ளனர்.

பணம் இருந்தால் தான் எதையும் சாதிக்க முடியும் என்ற நிலையை மாற்ற, இந்த முயற்சியை மேற்கொண்டதாக தெரிவித்தனர்.

Views: - 227

0

0