106வது வயதில் ஆறாவது இசை ஆல்பத்தை வெளியிட்ட பாட்டி

7 February 2021, 6:21 pm
Quick Share

106 வது வயதில், தன்னுடைய ஆறாவது இசை ஆல்பத்தை வெளியிட்டு, சாதனை செய்ய வயது ஒரு தடையில்லை என்று இளம் தலைமுறையினருக்கு வாயால் சொல்லாமல் செய்துகாட்டி இருக்கிறார் பிரான்ஸ் பாட்டி மனம் இருந்தால் எந்த வயதிலும் சாதிக்கலாம் என்பதற்கு பிரான்சை சேர்ந்த கொலேட்டே மேஸ் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறார்.

கொலேட்டே மேஸ், பாரிஸில், 1914ம் ஆண்டில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். தந்தை உர நிறுவனம் நடத்தி வந்தார். அதிக கண்டிப்பு நிறைந்த குடும்பம் என்பதால், பள்ளி உள்ளிட்ட படிப்புகளில் சிறந்து விளங்கினார். பள்ளி பருவத்திலேயே, கொலேட்டே மேஸிற்கு அதிக ஆர்வம் இருந்தால், பள்ளியில் இருந்த இசைக்குழுவில் பங்கேற்று இருந்தார். பியானோ இசைப்பதில் சிறந்து விளங்கிய கொலேட்டே மேஸிற்கு தற்போது 106 வயது ஆகிறது. இருந்தபோதிலும், இசை மீது உள்ள தணியாத ஆர்வத்தால் இதுவரை 6 இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார்.

சுமேன், டிபுஸி, ஷோபின் உள்ளிட்ட இசைக்கலைஞர்களின் படைப்புகளை, தனது பியானோ இசையினால் கேட்பவர்களின் கண்களுக்கு தற்போதும் முன் நிறுத்துகிறார். அந்தளவிற்கு அவரது இசையில் அவ்வளவு துல்லியம் இன்றளவும் உள்ளது.
டிபுஸியின் படைப்புகளில் அவர்கள் உருவாக்கியுள்ள 3 வால்யூம்கள் கொண்ட ஆறாவது ஆல்பம், வரும் ஏப்ரலில் வெளியாக உள்ளது. கடந்த ஆண்டில் எரிக் சாட்டி உள்ளிட்ட இசை படைப்புகளை, பியானோ மூலம் இசைத்து அதை ஆல்பங்களாக அவர் வெளியிட்டுள்ளார். இன்றைய இளைய தலைமுறையினருக்கு சிறந்த வழி்காட்டியாக கொலேட்டே மேஸ் விளங்குவதாக மேஸின் மகன் பேப்ரைஸ் மேஸ் தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0