கட்டிட பணி நடக்கும் இடத்தில் புகுந்த முதலை! எவ்ளோ பெருசு தெரியுமா?

1 March 2021, 7:36 pm
Quick Share

குஜராத் மாநிலத்தில் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்திற்குள் உள்ள நீர்ப்பகுதியில் புகுந்து கொண்ட 11 அடி முதலையை, வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

குஜராத்தின் வதோதராவின் களன்பூர் பகுதியில், கட்டிட கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருந்த நிலையில், பயங்கரமான சம்பவம் ஒன்று நடந்தது. அங்கிருந்த பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில், 11 அடி நீளமுள்ள பெரிய முதலை ஒன்று பதுங்கியிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறை மற்றும் வனவிலங்கு மீட்பு அறக்கட்டளையினர் முதலையை பத்திரமாக மீட்டிருக்கின்றனர். அது பத்திரமாக அதன் இயற்கை வாழிடத்துக்கு கொண்டு சேர்க்கப்பட்டதாக, ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வனவிலங்கு மீட்பு அறக்கட்டளையின் தலைவர் அரவிந்த் பவார் கூறுகையில், ‘‘கட்டுமான தளம் ஒன்றிலிருந்து பில்டர் ஒருவர் எங்களை மொபைலில் அழைத்து, பள்ளத்தில் முதலை பதுங்கியிருப்பதாக தகவல் தெரிவித்தார். நாங்கள் அதனை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளோம்’’ என்று கூறினார்.

களன்பூர் கிராமத்தில் முதலை புகுவது இது ஒன்றும் முதன்முறை அல்ல. கடந்த 2020 ஜூலை மாதம், கிராமத்தில் வீடுகள் அதிகம் இருக்கும் பகுதிக்கு அருகே முதலை ஒன்று புகுந்தது. அதிக மலை பெய்தால் இவ்வாறு நிகழ்ந்தது என தெரிவித்த அதிகாரிகள், அதனை மீட்டு பாதுகாப்பான இடத்தில் கொண்டு விட்டனர். ஆனால் இப்போது மழைக்காலம் இல்லை என்பதால், முதலை எதற்காக கட்டுமான பணி நடைபெறும் இடத்திற்கு வந்தது என தெரியவில்லை.

ஆஸ்திரேலியாவில், இதுபோல, முதலைகள் அடிக்கடி மனித குடியிருப்புகளுக்குள் புகும் சம்பவம் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 10

0

0