அணில் குஞ்சுடன் காதல் கொண்ட மொரட்டு நாய்! கண்ணீர் வரவைக்கும் கிளைமேக்ஸ்

22 January 2021, 7:55 pm
Quick Share

115 பவுண்ட் எடை கொண்ட பெரிய நாய் ஒன்று, புதிதாக பிறந்த குட்டி அணில் குஞ்சுடன் பாசப்பிணைப்பாக இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. பிரிந்தபின் அந்த நாய் கவலையில் மூழ்கி நம்மையும் கரைய வைத்துள்ளது.

பிற விலங்குகள் மீதான அன்பு என்றும் நெட்டிசன்களை கவரும். அப்படித்தான், தாய் அணில் ஒன்று குட்டி போட்டு அதனை மரத்தில் வைத்திருக்கிறது. தவறுதலாக அது கீழே விழுந்துவிட, கண் திறக்காத அந்த குட்டி தனியாக தவித்திருக்கிறது. பெரிய அணிலுக்கும் என்ன ஆனது என தெரியவில்லை. இதனையடுத்து குட்டி அணிலை மீட்ட பெண் ஒருவர், அதனை தன் வீட்டிற்கு எடுத்து வந்து, புட்டி பால் கொடுத்து உயிர் பிழைக்க வைத்திருக்கிறார்.

அந்த பெண், தனது வீட்டில் 115 பவுண்ட் எடை கொண்ட சார்லி என்ற பெரிய நாய் ஒன்றையும் வளர்த்து வந்திருக்கிறார். அணில் குட்டியை அது என்ன செய்யுமோ என பயந்த அவருக்கு ஆச்சரியம் தரும் வகையில், அமைந்து விட்டது நாயின் செயல்.

ஆம்.. குட்டி அணிலை கண்ணும் கருத்துமாக பார்த்து வந்திருக்கிறது அந்த நாய். அணிலும் அதனுடன் ஒன்றிவிட்டது. கண்களை திறந்த பின், நாயின் மேல் படுத்து தூங்குவது, ஓடி விளையாடுவது என அணில் அதகளம் பண்ண, நாயும் அதனை அனுமதித்தது. இப்படி சென்று கொண்டிருக்கையில், இரவில் தூங்கிய அணில், மறுநாள் எழுந்தரிக்கவில்லை. அணில் குட்டி இறந்துவிட்டதை நாயால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வாயில்லாத அந்த ஜீவன், தனது அன்பை கண்ணீரால் காட்டியது.

ஒருகட்டத்தில் தனது செல்ல நாய் படும் துன்பத்தை காண முடியாத அந்த பெண், அணில் பொம்மை ஒன்றை வாங்கி வந்து நாயிடம் தந்திருக்கிறார். அதனை ஏற்றுக்கொண்ட நாய், அந்த பொம்மையுடன் விளையாட துவங்கிவிட்டது.எங்கு சென்றாலும் அந்த பொம்மையை வாயில் கவ்வி செல்லும் நாய், தூங்கும் போதும் அதனுடனேயே படுக்கிறது. அணில் குட்டி மீது நாய் கொண்ட காதல், நெட்டிசன்களை கரைத்து விட்டது. ‘தி டூடூ’ இந்த வீடியோவை தனது டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட, அது வைரலாகி உள்ளது.

Views: - 9

0

0