139 ஆண்டுகள் பழமையான வீடு! இடம் மாற்றிய தொழிலாளர்களுக்கு அள்ளி கொடுத்த வள்ளல்

24 February 2021, 3:17 pm
Quick Share

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில், 139 ஆண்டுகள் பழமையான வீடு ஒன்றை, அதன் இடத்திலிருந்து அலேக்காக தூக்கி, சேதம் இல்லாமல் வேறு இடத்திற்கு மாற்றியதற்காக, அந்த வீட்டின் உரிமையாளர், பணியாளர்களுக்கு 2.9 கோடி ரூபாய் கொடுத்து அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார்.

சாலைகளில் நகர்ந்து செல்லும் வீட்டினை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில், கடந்த 139 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீட்டினை, அதன் புதிய முகவரிக்கு, சாலை வழியாக பணியாளர்கள் நகர்த்தி சென்றிருக்கிறார்கள். இத்தாலிய முறையை பயன்படுத்தி இந்த வீடு கடந்த 1880 ஆம் ஆண்டு கட்டப்பட்டிருக்கிறது.

6 பெட்ரூம் வசதி கொண்ட இந்த பிரமாண்ட வீட்டில், 3 பாத்ரூம் வசதிகள் இருந்துள்ளன. பச்சை நிற பெயிண்ட் அடிக்கப்பட்ட இந்த வீடு, அதன் உரிமையாளருக்கு ஏதுவாக, சிறிது தொலைவு தள்ளி இருக்கும் இடத்திற்கு மாற்றப்பட்டது. இாற்காக அலேக்காக பெயர்த்தெடுக்கப்பட்ட இந்த வீடு, 482 மீட்டர் தொலைவில் இருக்கும் இடத்திற்கு, ஹைட்ராலிக் மிஷின்களின் உதவியுடன் மெதுவாக நகர்த்தி செல்லப்பட்டிருக்கிறது.

வீட்டினை சேதாரமின்றி நகர்த்தி கொண்டு சென்ற ஊழியர்களுக்கு, வீட்டின் உரிமையாளர் இந்திய மதிப்பில் சுமார் 2.9 கோடி ரூபாயை வழங்கி அவர்களை ஆனந்தமாக்கி உள்ளார். பிரம்மாண்ட சக்கரங்கள் கொண்ட டிரக்கின் மீது வைக்கப்பட்ட வீடு, சாலையில் நகர்ந்து செல்வதை அப்பகுதி மக்கள் ஆர்ச்சயர்யத்துடன் பார்த்தனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Views: - 6

0

0