ஆப்பரேஷன் செய்து 6 அடியாக வளர்ந்த இளைஞர்! எவ்வளவு செலவு தெரியுமா?

20 January 2021, 3:23 pm
Quick Share

அமெரிக்காவில் உயரமாக வளர ஆசைப்பட்ட 28 வயது இளைஞர் ஒருவர், அறுவை சிகிச்சை செய்து, தனது உயரத்தை 2 இன்ச் அதிகரித்து 6 அடியை எட்டினார். லிம்ப் லென்தனிங் என்ற அறுவை சிகிச்சை மூலம் இதனை டாக்டர்கள் சாத்தியப்படுத்தி சாதனை படைத்திருக்கிறார்கள்.

ஒல்லி பிச்சான், குண்டு ராவ், ஒட்டை குச்சி, குள்ள மணி என ஆளின் தோற்றத்துக்கு ஏற்ப பட்டப்பெயர் வைத்து அழைக்கும் பழக்கம் நம் ஊரில் உள்ளது. இதே போல் அமெரிக்காவில், தன்னை குட்டையாக நினைத்த அல்போன்ஸா புளோராஸ் என்ற 28 வயது இளைஞர், தனது விருப்பமான பேஸ்கட்பால் பிளேயர்கள் போல உயரமாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார்.

டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸை சேர்ந்த இந்த இளைஞருக்கு தனது 12 வயதில் இருந்தே இந்த ஆசை இருந்திருக்கிறது. இளைஞரான பின்னர் அது பேராசையாக, இதற்காக மருத்துவத்தின் உதவியை நாடியிருக்கிறார். அப்போது தான் அவருக்கு லிம்ப் லென்தனிங் அறுவை சிகிச்சை குறித்து தெரிய வந்திருக்கிறது. உடனே இதனை பயன்படுத்தி தனது உயரத்தை அதிகரிக்க நினைத்திருக்கிறார். ஆனால் வீட்டில் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இது தேவையற்றது என நண்பர்களும் எச்சரித்திருக்கின்றனர்.

ஆனால் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கெவின் டெபிபர்ஷாத்தின் பராமரிப்பில் அவர் விடாமுயற்சியுடன் இறங்கினார். முடிவில் தனது கனவு உயரமான 6 அடியை ஆப்பரேஷன் மூலம் அடைந்திருக்கிறார். 5 அடி 11 இன்ச் மட்மே இருந்த அவர், தற்போது 2 இன்ச் அதிகரித்து 6 அடியை எட்டி உள்ளார். இதற்காக இவர் 75 ஆயிரம் அமெரிக்க டாலர்களை செலவழித்துள்ளார். இந்திய மதிப்பில் சுமார் 55 லட்சம் ரூபாய்.. அம்மாடியோவ்…!

Views: - 4

0

0