378 கேரட் அளவிலான வெள்ளை வைரம் தோண்டி எடுப்பு – விலையை கேட்டால் அசந்து விடுவீர்கள்…

31 January 2021, 3:54 pm
Quick Share

378 கேரட் அளவிலான வெள்ளை வைரத்தை தோண்டி எடுத்துள்ளதாக அறிவித்துள்ள கனடாவின் லுகாரா நிறுவனம், இந்த வைரத்தின் விலையை அறிவித்துள்ளது. இந்த விலையை கேட்டால், நீங்கள் நிச்சயமாக மலைத்துப் போய் விடுவீர்கள்…
கனடாவின் வான்கூவர் நகரத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் லுகாரா டைமண்ட் வர்த்தக நிறுவனம், தென் ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் உள்ள சுரங்கத்தில் இருந்து 348 கேரட் அளவிலான வெள்ளை வைரத்தை வெட்டி எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த சுரங்கத்தில் இருந்து தான் கடந்த 15ம் தேதி தான் 341 கேரட் அளவிலான வைரம் வெட்டி எடுக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக, லுகாரா டைமண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, போட்ஸ்வானாவில் உள்ள கரோவி சுரங்கத்தில் இருந்து இதுவரை 200 கேரட்களுக்கு மேற்பட்ட அளவிலான 55 வைரங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன. 2012ம் ஆண்டிலிருந்து இந்த சுரங்கத்தில் வைரங்கள் வெட்டி எடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 341 கேரட் அளவிலான வைரமே அதிக அளவினதாக இருந்த நிலையில், தற்போது 378 கேரட் அளவிலான வெள்ளை வைரம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.

பார்ப்பதற்கு மிகவும் பிரமிப்பாகவும் மிக நேர்த்தியாகவும் உள்ள இந்த வெள்ளை வைரத்தின் விலை சந்தை மதிப்பில் 15 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் ( இந்திய மதிப்பில், இது ரூ. 110 கோடிகளுக்கு மேல் ) இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுரங்கத்தில், 2026ம் ஆண்டு வரை வைரங்களை வெட்டி எடுக்க தங்களது நிறுவனம் அனுமதியை பெற்றுள்ளது. இந்த 2021ம் ஆண்டு துவக்கமே, தங்களது நிறுவனத்திற்கு மகிழ்ச்சியை அளிக்கும் ஆண்டாக உள்ளதாக அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி தாமஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0