6வது மனைவியுடன் “அது” இல்லை; 7வது திருமணத்திற்குப் பெண்பார்க்கும் 63 வயது தாத்தா…

27 January 2021, 10:22 am
63 Years old Marriage - Updatenews360
Quick Share

63 வயது முதியவர் ஒருவர் தனது 6வது மனைவி தன்னுடன் உடலுறவு வைத்துக்கொள்ளாததால் 7வதாக திருமணம் செய்யப் பெண் பார்க்கும் சம்பவம் தற்போது குஜராத்தில் நடந்துள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் பகுதியைச்சேர்ந்தவர் அயூப் தேகியா, 63 வயது விவசாயியான இவர் கடந்த 2020 செப்டம்பர் மாதம் தன்னைவிட 21 வயது குறைவான பெண்ணை தனது 6வது மனைவியாகத் திருமணம் செய்து கொண்டார். தற்போது அவரையும் விவாகரத்து செய்துவிட்டு, 7வது திருமணம் செய்யப் பெண் தேடி வருகிறார். இது குறித்து அவர் கூறும் போது : “எனது 6வது மனைவி என்னுடன் உடலுறவு வைக்க மறுத்துவிட்டார். அவர் எனக்கு இருக்கும் இதய பிரச்சனை மற்றும் நீரழிவு பிரச்சனைகளைக் காரணம் காட்டி ஒதுக்குகிறார். அதனால் அவரை விட்டு தற்போது பிரிந்து விட்டேன். என்னுடன் உடலுறவு வைத்துக்கொள்ளும் பெண்ணையே 7வது மனைவியாக ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன்” எனக்கூறினார்.

இது குறித்து அவரது 6வது மனைவி கூறும் போது : “எனக்கு அவருடன் திருமணம் ஆகும் போது அவருக்கு ஏற்கனவே 5 முறை திருமணம் ஆன விவகாரமே தெரியாது. நான் அவருக்கு 6வது மனைவி என்பதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.” எனக்கூறினார். இவருக்கு 42 வயதாகும் நிலையில் விதவையான இவருக்குத் தான் அயூப் தேகியா தாலிகட்டி 6வது மனைவியாக்கியுள்ளார். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் அயூப் தேகியாவின் முதல் மனைவியும் இன்று அவர் வசிக்கும் அதே கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். அவருக்கும் அயூப் தேகியாவிற்கும் பிறந்த 20-35 வயதிற்குட்பட்ட 5 குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.

6 பெண்களைத் திருமணம் செய்துவிட்டு தற்போது 7வதாக திருமணம் செய்ய 63 வயது முதியவர் பெண் பார்த்து வருவது தற்போது வைரலாக பரவி வருகிறது.

Views: - 0

0

0