72 ஆண்டுகள் பழமையான விஸ்கி ரூ. 40 லட்சத்துக்கு ஏலம்

31 January 2021, 5:12 pm
Quick Share

ஹாங்காங் நாட்டில் நடைபெற்ற ஏலத்தில், 72 ஆண்டுகள் பழமையான கிளென் கிராண்ட் சிங்கிள் மால்ட் விஸ்கி, 54 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று போன்ற பேரிடர் காலங்களால், மக்களின் பொழுதுபோக்கு பெரும்பாலும் பாதிக்கப்பட்டு இருப்பதாக பலர் சொல்லி வருகின்றனர். ஆனால், இந்த விசயத்தை நீங்கள் கேள்விப்பட்டால், அது பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு ஒப்பான நிகழ்வு என்பது தெரிய வரும். அப்படி என்ன விசயம் என்று கேட்கிறீர்களா?. இந்த செய்தியை தொடர்ந்து படியுங்கள்.
ஸ்காட்லாந்து நாட்டின் முன்னணி மது தயாரிப்பு நிறுவனமான கார்டோன் அண்ட் மேக்பைய்ல் நிறுவனம், 1948ம் ஆண்டில், கிளென் கிராண்ட் சிங்கிள் மால்ட்டில் விஸ்கி தயாரித்தது.

இந்த விஸ்கி பாட்டில், ஹாங்காங்கில் உள்ள போன்ஹாம்ஸ் ஏல மையத்தில் ஏலம் விடப்பட்டது. இந்த விஸ்கி பாட்டில் 4,21,600ஹாங்காங் டாலர்கள் மதிப்பிற்கு ஏலம் போனது. இது 54,300 அமெரிக்க டாலர்கள் என்றும், இந்திய மதிப்பில், ரூ. 39.50 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. கிளென் கிராண்ட் டிஸ்டில்லரி நிறுவனம், 1948ம் ஆண்டில் தயாரித்த இந்த விஸ்கி உடன், டார்டிங்டன் கிறிஸ்டல் டிகேண்டர் மற்றும் அமெரிக்கன் பிளாக் வால்நட்டும் பார்வையாளர்களுக்கு காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்தது. கொரோனா தொற்று போன்ற பேரிடர் காலங்களில் பொருளாதார ஸ்திரத்தன்மையற்ற நிலை நிலவி வரும் இந்த இக்கட்டான காலகட்டத்திலும், 

மக்களுக்கு அரிய வகை விஸ்கிகள் மீதான ஈர்ப்பு, சற்றும் குறையவில்லை என்பதற்கு இந்த ஏல நிகழ்வையே சாட்சியாக சொல்லலாம். மற்ற பொருட்களின் மீது மேற்கொள்ளப்படும் முதலீடுகளை விட, இதுபோன்ற அரிய விஸ்கிகள் உள்ளிட்ட பழங்கால பொருட்கள் மீது செய்யப்படும் முதலீடு, மற்றதைவிட 4 மடங்கு அளவிற்கு லாபத்தை அளித்துவருகிறது என்று அரிய வகை விஸ்கிகள் கலெக்சனில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் ஈடுபட்டுள்ள கிறிஸ்டோபர் போங் தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0