100 பொம்மைகளை கைப்பட செய்த 93 வயது பாட்டி; யாருக்கு தந்தார் தெரியுமா?

14 January 2021, 8:18 pm
Quick Share

பெய்ரூட் வெடிவிபத்தால், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில், 100 பொம்மைகள், தனது கைப்பட தயாரித்து தந்துள்ளார் 93 வயது நிரம்பிய மூதாட்டி ஒருவர். அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி, லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகக் கிடங்கில், சுமார் 6 ஆண்டுகளாக சேமித்து வைக்கப்பட்ட 2,750 டன் மதிப்பிலான அமோனியம் நைட்ரேட் மருந்து வெடித்தது. இந்த விபத்தில் 200-க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். மேலும், பெய்ரூட் வெடி விபத்தில், 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

பெய்ரூட் வெடிவிபத்தில் பாதிக்கப்பட்ட குழந்தை ஒன்று, 93 வயதான யோலண்டே லபாகி என்ற பாட்டியிடம், ‘என் பொம்மை ஏன் உடைந்தது?’ என கவலையுடன் கூறி உள்ளது. இதனால் வருத்தம் அடைந்த லபாகி, குழந்தைகளின் முகத்தில் சிரிப்பை பார்க்க என்ன செய்ய வேண்டும் என யோசித்து, ஒரு முடிவுக்கு வந்தார். பெயிண்டரான அவர், 100 பொம்மைகளை தனது கைப்பட தயாரித்து, அதனை அக்குழந்தைகளுக்கு வழங்க எண்ணி, அதற்கான வேலைகளில் இறங்கினார். கிறிஸ்துமஸ் தினத்துக்குள் பொம்மைகளை செய்ய முயற்சித்து, 100 பொம்மைகளுக்கும் தானே எம்ப்ராய்டரி வேலை செய்து, ஒரு மாதத்திற்குள் அதனை பெய்ரூட் குழந்தைகளுக்கு பரிசாக கொடுத்துள்ளார்.

பொம்மைகளை பெற்றுக் கொண்ட குழந்தைகளின் போட்டோக்களே தனக்கு வெகுமதி என மகிழ்ச்சியாக தெரிவிக்கும் இந்த பாட்டி, இது எனக்கு கடவுளின் பரிசு என்கிறார். மனிதாபிமானம் கொண்ட இந்த பாட்டிக்கு நம் வாழ்த்துக்கள்.

Views: - 8

0

0