‘தாயைவிட பெரிய சக்தி இந்த உலகத்துல இல்ல’: நொடிப்பொழுதில் குழந்தையை காப்பாற்றிய Super Mom..!!
Author: Aarthi Sivakumar24 September 2021, 4:33 pm
சமூகளவலைத்தளத்தில் பகிரப்பட்ட வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது . இரண்டு அல்லது மூன்று வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்று அருகில் உள்ள ஒரு செங்கற்கள் அடுக்கிவைக்கப்பட்ட சுவற்றின் அருகில் தனது தாயுடன் விளையாடி கொண்டிருக்கிறான்.
கண்ணிமைக்கும் நேரத்தில் அடுக்கி வைக்கப்பட்ட செங்கற்கள் குழந்தை நிற்கும் இடத்தில் சாய்கிறது . சுவர் சாய்வதை சுதாரித்துக்கொண்ட தாய் சமயோஜிதமாக செயல்பட்டு குழந்தையை தனது இரு கால்களுக்கு இடையே மறைத்துக்கொண்டு குழந்தைமேல் வில இருந்த செங்கற்களை தன் உடம்பால் தடுத்துவிட்டார். இதனால் பெரும்விபத்தில் சிக்க இருந்த குழந்தை சிறு சிறு சிராய்ப்புகளுடன் தப்பித்தான்.
இவ்வுலகத்தில் நம்மை உயிரினும் பெரிதாய் நேசிப்பவர்கள் நம் பெற்றோர்கள் மட்டும் தான் என்பதற்கு இந்த நிகழ்வே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. தன் உயிரை பொருட்படுத்தாமல் அத்துணை செங்கற்கள் அடியையும் தான் தாங்கிக்கொண்டு குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லையே என்று நிம்மைதி அடைபவள் அன்னை மட்டும் தான்.
குழந்தையை காப்பாற்ற தாய் செய்த இந்த தியாகம் நெகிழ்ச்சி அடையச் செய்கிறது. இந்த வீடியோ பதிவை இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்த் நந்தா தனது ட்விட்டரில் “இந்த உலகிற்கு தாய்மார்கள் தேவை” என்ற தலைப்பில் ட்வீட் செய்துள்ளார். இந்த வீடியோவை ஏராளமானோர் பார்த்துள்ளனர்.
0
0