குட்டிகளை நிராகரித்த போலார் கரடி! கியூட் குட்டிகளுக்கு என்ன ஆச்சு தெரியுமா?

21 January 2021, 9:36 pm
Quick Share

ரஷ்ய மிருககாட்சி சாலையில், புதிதாக குட்டிகளை பெற்றெடுத்த போலார் கரடி, குட்டிகளை ஏற்க மறுத்து விட்டது. இதனையடுத்து, மிருகக்காட்சிசாலை ஊழியர்கள் கண்காணிப்பில் அந்த அழகிய இரு குட்டிகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

ரஷ்யாவின் கெலென்ட்ஜிக் நகரில் உள்ள ஒரு சஃபாரி பூங்காவில், 7 வயது நிரம்பிய துருவ கரடி (போலார் கரடி) ஒன்று கர்ப்பம் தரித்திருந்தது. இதனால் அதனை ஜூ ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். பிரசவத்துக்குப்பின், குட்டிகளுடன் அது தங்குவதற்கு சிறப்பு இடமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், சமீபத்தில் இரு அழகிய குட்டிகளை அந்த போலார் கரடி பெற்றெடுத்தது.

ஆனால் குட்டிகளை ஈன்ற பின், குட்டிகளுக்கு அருகில் கூட செல்ல மறுத்ததுடன், பால் கொடுக்கவும் மறுத்துவிட்டது அந்த கரடி. மேலும் அதற்காக தயார் செய்யப்பட்டிருந்த சிறப்பு அறைக்கு செல்லவும் மறுத்துவிட்டது. இதனையடுத்து ஜூ ஊழியர்கள் 6 பேர் அந்த குட்டிகளுக்கு தாயாக மாறி உள்ளனர். சூடான பால் தருவதுடன், மசாஜ் செய்தும் குட்டிகளை கண்ணும் கருத்துமாக அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள்.

இதுகுறித்து ஜூவின் துணை இயக்குனர் யெலெனா மிலோவிடோவா கூறுகையில், ‘துரதிருஷ்டவசமாக குட்டிகளை அதன் அம்மா ஏற்க மறுத்துவிட்டது. தாய்வழி உள்ளுணர்வின் அறிகுறிகளையும் அது காட்டவில்லை. இதனால் அதற்கு ஊழியர்கள் தாயாக மாறி கவனித்து வருகின்றனர். எங்களது வாசனைகளை குட்டிகள் அடையாளம் கண்டு கொண்டுள்ளன. எங்களை அம்மாவாகவே பாவிக்கின்றன குட்டிகள். தற்போது தான் குட்டிகள் கண்களை திறந்துள்ளன. இது எங்களுக்கு புதிய அனுபவம்’ என்றார்.

Views: - 3

0

0