157 முறை தேர்வில் தோல்வியடைந்து 158 முறையில் “லேனர் லைசென்ஸ்” வாங்கிய “பலே டிரைவர்”…

14 January 2021, 7:11 pm
Quick Share

ஒரு மனிதனிற்கு வெற்றியும் தோல்வியும் சகஜம் தான். ஆனால் தோல்வியே வாழ்க்கையாக இருந்தால் கொஞ்சம் கஷ்டம் தான் ஆனால் அந்த தோல்விகளிலிருந்து மீண்டு வர விடாமுயற்சி வேண்டும். அப்பொழுது தான் தோல்வியை வென்று வெற்றியைச் சுவைக்க முடியும்.

இங்கிலாந்தைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் 157 முறை டிரைவிங் பயிற்றுநர் தேர்வில் தோல்வியடைந்து 158வது முறை பயிற்சி லைசென்ஸை வாங்கியுள்ளார். இங்கிலாந்தில் முதலில் லைசென்ஸ் பெற இந்தியாவில் உள்ள முறை போல முதலில் தேர்வு எழுத வேண்டும் அந்த தேர்வில் வெற்றி பெற்றால் பயிற்சிக்கான லைசென்ஸ் வழங்கப்படும். சுமார் அதன் பின் டிரைவிங் தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றால் தான் லைசென்ஸ் கிடைக்கும்.

இவர் 157 முறையும் பயிற்சி லைசென்ஸிற்கான தேர்விலேயே தோல்வியடைந்துவிட்டார். இறுதியாக எப்படியோ 158 முறை அந்த தேர்வில் வெற்றி பெற்று பயிற்சி லைசென்ஸை பெற்றுள்ளார். இவர் இந்த பயிற்சி லைசென்சிற்காக ஒவ்வொரு முறை விண்ணப்பிக்கும் போதும் ஆன செலவு மொத்தமாக 3 ஆயிரம் பவுண்ட் இந்திய மதிப்பில் சுமார் ரூ3 லட்சம் செலவு செய்துள்ளார்.

இந்தச்செய்தி வெளியில் வந்த போது தான் ஓட்டுநர் உரிமம் வழங்கும் பள்ளியில் உள்ள தரவுகளைப் பார்த்த போது 30 வயது பெண் ஒருவர் 117 முறை இந்த பயிற்சி ஓட்டுநர் லைசென்ஸிற்கான தேர்வை எழுதியுள்ளார்.ஆனால் இன்னும் அந்த தேர்வில் தேர்ச்சியாக முடியவில்லை. 48 வயது பெண் ஒருவர் 94 முறை இந்த தேர்வை எழுதியுள்ளார் 94 முறையில் தேர்வில் தேர்ச்சியாகியுள்ளார்.

டிரைவிங் தேர்வைப் பொறுத்தவரை 72 வயது முதியவர் ஒருவர் 43 முறை முயன்று 43வது முறையில் வெற்றி பெற்றுள்ளார். 47 வயது பெண் ஒருவர் 41 முறை முயன்று இன்னும் முயன்று கொண்டே இருக்கிறார் என்பது தெரியவந்தது. விடாமுயற்சி என்றால் இவர்களைத் தான் சொல்ல வேண்டும். வெற்றி என்றும் விடாமுயற்சிதான் கிடைக்கும் என்பதற்கு இவர்கள் ஒர் எடுத்துக்காட்டு.

Views: - 6

0

0