லம்போகினி காரை ரூ.2 லட்சத்தில் தயாரித்த கேரள இளைஞர்!

19 January 2021, 8:24 pm
Quick Share

கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் மினி லம்போகினி காரை ரூ.2 லட்சத்தில் தயாரித்து அசத்தி உள்ளார். லம்போகினி காரின் விலை எவ்வளவு தெரியமா? வாய் பிளக்காதீங்க.. வெறும் 3 கோடியே 50 லட்சம் தானாம்!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் அனாஸ் பேபி. 25 வயது இளைஞரான இவர் எம்.பி.ஏ. படித்துள்ளார். ஆட்டோமொபைல்ஸ் துறையில், இவருக்கு இருந்த ஆர்வம் காரணமாக, தனது பத்தாம் வகுப்பின் போதே, சைக்கிளை மோட்டார் சைக்கிளாக மாற்றி பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். தனது முதுகலை படிப்புக்கு பின், மங்களூருவில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.

ஆலுவாலில் உள்ள லம்போகினி ஷோரூமில் உலகின் அதிக விலையுள்ள காரான லம்போகினி ஹூராகேன் காரை பார்த்த அனாஸ், அதன் மீது காதல் கொண்டு, தானே தயாரிக்க வேண்டும் என முடிவு செய்தார். இதற்காக தனது வேலையை விட்டுவிட்ட, சொந்த ஊர் வந்து அதற்கான முயற்சியில் இறங்கி உள்ளார். முதலில் லம்போகினி கார் குறித்து உங்களுக்கு தெரியுமா?

லம்போகினி காரின் விலையை கேட்டாலே நமக்கு எல்லாம் தலை சுற்றும். அதன் விலை சுமார் 3 கோடியே 50 லட்சம் ரூபாய். உலகில் விலை உயர்ந்த கார்களில் இதுவும் ஒன்று. கேரளாவில் இந்த கார் இருவரிடம் மட்டுமே உள்ளது. முதலில் பிரபல மலையாள நடிகர் பிரித்வி ராஜ் இந்த காரை வாங்கினார். அவருக்கு பின், கோட்டயத்தை சேர்ந்த தொழில் அதிபரரான சிரில் பிளிப் என்பவர் வாங்கினார். தற்போது, மினி லம்போகினி காரை தனது சொந்த முயற்சியில் அனாஸ் தயாரித்து அனைவரையும் வாய் பிளக்க வைத்தார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி, அனாஸ் வீடு கடும் பாதிப்புக்கு உள்ளான நிலையில், அவரது அப்பாவும் காலமாகினார். குடும்ப பொறுப்பு முழுவதும் அனாஸ் மீது விழுந்த நிலையில், கிடைத்த வேலையை விட்டுவிட்டு, கார் தயாரிக்கிறேன் என இறங்கிய இவரை குடும்பத்தினர் எதிர்த்துள்ளனர். அவர்களின் எதிர்ப்பையும் மீறி, தற்போது லம்போகினி காரை வெற்றிகரமாக தயாரித்துள்ளார்.

பல மாநிலங்களிலிருந்து காரின் உதிரி பாகங்களை வாங்கிய அனாஸ், தனக்கான லம்போகினி காரை தயாரித்துள்ளார். இதனை தயாரிக்க வெறும் 2 லட்சம் மட்டுமே இவர் செலவு செய்துள்ளார். ஆச்சரியம் தானே! தற்போது சமூக வலைதளங்களில் இவர்தான் ஹாட் டாப்பிக்காக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Views: - 7

0

0