தூக்கத்தில் வாய்க்குள் சென்ற ஏர்பட்ஸ்! அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?

8 February 2021, 9:49 am
Air Buds -Updatenews360
Quick Share

அமெரிக்காவில், தூக்கத்தில் தனது காதில் மாட்டியிருந்த ‘ஏர்பட்ஸ்’ஐ, தெரியாமல் முழுங்கி இருக்கிறார் ஒருவர். காலையில் எழுந்தபோது, நெஞ்சுவலி ஏற்பட, மருத்துவமனை சென்றபின் தான், அவர் ஏர்பட்ஸ்–ஐ முழுங்கியிருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் அதனை டாக்டர்கள் வெற்றிகரமாக வெளியே எடுத்தனர்.

மொபைல் போன் மக்களின் வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டது. முன்பு ஹெட்போனில் பாடல் கேட்டுக் கொண்டிருந்த இளசுகள், தொழில்நுட்ப வளர்ச்சியால், வயர் இல்லாத ஏர்பட்ஸ் வர, அதற்கு மாறிவிட்டனர். காதில் ஏர்பட்ஸ் இல்லாத இளைஞர்களை காண்பது அரிதாகி வருகிறது. பந்தா பரமசிவன்களும், தங்கள் பங்குக்கு ஏர்பட்ஸ் உடன் சாலையில் உலாவ துவங்கி விட்டனர்.

இந்நிலையில், அமெரிக்காவில், ஏர்பட்ஸை தூக்கத்தில் ஒருவர் விழுங்கிய வினோத சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவிலுள்ள மாசசூசெட்ஸ் மாகாணத்தில் வசித்து வருபவர் பிராட் கவுதியர் (வயது 38). இசை பிரியரான இவர், இரவில் ஏர்பட்ஸில் பாடல் கேட்டுக் கொண்டே படுப்பது தான் வழக்கமாம். அப்படி ஒருநாள், ஏர்பட்ஸ் உடன் படுத்த அவருக்கு, காலையில் நெஞ்சில் எப்போதும் இல்லாத வலி ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர்.

அப்போது டாக்டர்களிடம், ஏர்பட்ஸ் மிஸ் ஆன கதையை கூறி, ஒருவேளை தான் அதை விழுங்கி இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து, எக்ஸ்ரே எடுத்து பார்த்தலில், அவரது உணவுக்குழாயில் ஏர்பட்ஸ் சிக்கியிருப்பதை டாக்டர்கள் உறுதி செய்தனர். ‘எண்டோஸ்கோபிக்’ சிகிச்சை மூலம் அவரது வயிற்றில் இருந்த ஏர்பட்ஸை டாக்டர்கள் அகற்றி உள்ளனர். தற்போது பிராட் நலமுடன் இருப்பதாகவும், தன்னை போல் யாரும் செய்யாதீர்கள் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். பட்டா தான் தெரியும்…! சரி தானே!

Views: - 0

0

0