நிஜ வாழ்க்கையில் ஒரு ‘எலாஸ்டிக் கேர்ள்’: வில்லாக வளையும் உடல்

Author: Udayachandran
31 December 2020, 9:36 am
Elastic Girl - Updatenews360
Quick Share

தனது உடலை வில்லாக வளைக்கும் 12 வயது சிறுமியான லிபர்டி பேரோஸ் செய்யும் சாகசங்கள், நெட்டிசன்களை ‘‘வாவ்’’ போட வைத்துள்ளது.

குழந்தைகளுக்கு குதூகலம் அளித்த அனிமேஷன் படமான, இன்கிரடிபிள் திரைப்படத்தில், ‘‘எலாஸ்டிக் கேர்ள்’’ என்ற கதாபாத்திரம் ஒன்று வரும். அந்த பெண் தனக்கிருக்கும் அதீத சக்தியால், தனது உடலை வில்லாக வளைத்து, பல செயல்களில் ஈடுபடுவார். திரையில் செய்யும் சாகசங்களை, குழந்தைகள் வாய் பிளந்து பார்ப்பர். குழந்தைகள் மட்டுமன்றி பெரியவர்களையும் அந்த கதாபாத்திரம் கவர்ந்தது.

அந்த கதாபாத்திரம் போலவே, பிரிட்டனை சேர்ந்த, 12 வயது சிறுமி ஒருவர், தன் உடம்பை வளைத்து செய்யும் சாகசங்கள் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார். லிபர்டி பேரோஸ் என்ற அந்த சிறுமி, யார்க் ஷயர் பகுதியை சேர்ந்தவர். ஒரு மியூசிக் வீடியோவில், பாப் ஸ்டார் ரிஹானா, தன் உடலை பின்னோக்கி வளைத்ததை பார்த்து தானும் முயற்சித்தார். அப்போது தனக்கு சிறப்பு திறமை இருப்பதை அச்சிறுமி முதலில் உணர்கிறார்.

இவ்வாறாக அவர் தொடர்ந்து முயற்சித்த போது, ஒருநாள் தன் தலைப்பகுதி தரையை தொட்டதை கண்டு ஆச்சரியம் அடைகிறார். இவரது பெற்றோர்களான ராம் மற்றும் எலிசெட் இருவரும் தங்கள் மகளின் திறமையை கண்டு வியப்படைகின்றனர். தொடர்ந்து மகளின் திறமையை மெருகேற்ற இருவரும் பெருங்பங்காற்றினர். தனது பெற்றோர்களிடத்தில், எலிசெட் தனது திறமையை காட்டிய போது, அவருக்கு வெறும் 10 வயது.

எலிசெட்டுக்கு ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கை துவங்கிய அவரது தந்தை, அதில் சில வீடியோக்களையும் அப்லோட் செய்திருக்கிறார். அதில் அவரது திறமையை பார்த்து, தாய்லாந்திலிருந்து அழைப்பு வருகிறது. மகளுக்கு கிடைத்த இந்த அரிய சந்தர்பத்திற்காக, தனது கார் உள்ளிட்ட சிலவற்றை விற்று, குடும்பத்துடன் தாய்லாந்து பயணித்திருக்கிறார். அங்கு மேடையில் சிறுமியின் சாகசத்தை பார்த்து அனைவரும் வியந்திருக்கின்றனர்.

தொடர்ந்து தனது சகாசங்களை ஹாலிவுட், கோலாலம்பூர் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளுக்குச் சென்று வெளிக்காட்டி உள்ளார். இதுகுறித்து சிறுமி கூறுகையில், ‘‘இது ஒரு வித்தியாசமான உணர்வு. முதலில் எனக்கு இது பயமாக இருந்தது. ஆனால் இயற்கையாகவே எனது உடல் வில்லாக வளைய ஒத்துழைக்கிறது’’ என்றார்.

இந்தச்சிறுமி, தன் உடலை ரப்பர் போல வளைத்து, ஓடும் ரயிலில் தொங்குவது, உடலை மடக்கி நடந்து செல்வது போன்ற சாகசங்களை செய்து சமூக வலைதளங்களில் அப்லோடு செய்ய, அந்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

Views: - 53

0

0