குப்பை பொறுக்கும் ‘டுவின்ஸ்’ பாடிய பாடல் வைரல்; பாராட்டி தள்ளிய ஆனந்த் மஹிந்த்ரா
23 February 2021, 1:32 pmடில்லியில் குப்பை பொறுக்கும் இரட்டையர்கள் பாடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை பகிர்ந்துள்ள ஆனந்த் மஹிந்திரா அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
டில்லியில் உள்ள நியூ பிரண்ட்ஸ் காலனியில் தினமும் குப்பை பொறுக்கும் பணியில் இரட்டையர்களாக ஹபீஸ், ஹபீபூர் என்ற இரு சிறுவர்கள் தினமும் ஈடுபட்டு வருகின்றனர். இனிய குரல்களை பெற்றிருக்கும் அவர்கள் பாடல் பாடிய வீடியோவை, மஹிந்த்ரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், தனது நண்பர் ரோஹித் கட்டார் இந்த வீடியோவை பகிர்ந்திருப்பதாக தெரிவித்துள்ள அவர், இரட்டையர்களின் பாடும் திறமையை கண்டு தான் மெய்சிலிர்த்து விட்டதாக தெரிவித்திருக்கிறார்.
மேலும் தனது டுவிட்டில், அவர்களுக்கு இசை பயிற்சி அளிக்க தான் விருப்பம் கொள்வதாகவும், அந்த இரட்டையர்களுக்கு டில்லியில் ஒரு இசை ஆசிரியரை பரிந்துரைக்கும்படியும், அவர் நெட்டிசன்களை கேட்டு கொண்டிருக்கிறார். காலையில் அவர்கள் தங்கள் வேலையை செய்தாலும், மாலை நேரத்தில் அவர்களுக்கு இசையை கற்பிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹபீஸ் மற்றும் ஹபீபூரின் குரல்களால் சொக்கி போன, டுவிட்டர்வாசிகள் இரட்டையர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர்களை வெளி உலகத்துக்கு தெரியப்படுத்திய ஆனந்த் மஹிந்திரா மற்றும் அவரது நண்பர் ரோஹித் கட்டாரையும் வாழ்த்தினர். சிலர் டில்லியில் இசை பயிற்சி அளிப்பவர்களின் மொபைல் எண்களையும் பகிர்ந்துள்ளனர். சிலர் டிவி ரியாலிட்ட ஷோக்களில் இந்த சிறுவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
0
0