ஒற்றை போட்டோவால் வைரலான மும்பை ரயில் பயணி! என்ன செய்திருக்கிறார் பாருங்க

3 February 2021, 7:11 pm
Quick Share

மும்பையில் கடந்த 11 மாதங்களுக்குப்பின், புறநகர் ரயில் சேவை மீண்டும் துவங்கப்பட்டுள்ள நிலையில், ரயில் பயணி ஒருவர் செய்த செயல், அவரை நாடு முழுவதும் வைலாக்கி உள்ளது. அவரது போட்டோவை ஆனந்த் மகேந்திராவும் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலத்தில், கொரோனா பரவல் உச்சம் தொட்டதை அடுத்து, கடந்த மார்ச் மாதம் புறநகர் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ஜூன் மாதம் ரயில் சேவை மீண்டும் துவங்கப்பட்ட போதும், கொரோனா முன்களப் பணியாளர்கள், அத்தியாவசியப் பணியில் உள்ள அதிகாரிகளுக்கு மட்டும் மீண்டும் துவங்கியது. 1200 பேர் அமரக்கூடிய ரயிலில் 700 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள்.

ரயில் சேவை இயங்காத போது, காற்றுவாங்கிய ரயில் நிலையங்களின் போட்டோவை வேதனையுடன் மும்பைவாசிகள் பகிர்ந்து வந்தனர். மும்பையில் வசிக்கும் மில்லியன் கணக்கான மக்களுக்கு, அதன் புறநகர் ரயில் சேவை உயிர்நாடி போன்றது. மும்பைகாரர்களுக்கு தெரியும் புறநகர் ரயில் சேவை அவர்களின் வாழ்வில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று.

இந்நிலையில், 11 மாதங்களுக்கு பின், பொதுமக்கள் அனைவரும் பயணிக்க ஏற்பாடு செய்துள்ள ரயில்வே, புறநகர் ரயில் சேவையை பிப்ரவரி 1ம் தேதி முதில் மீண்டும் துவங்கியது. நீண்ட இடைவெளிக்கு பின், ரயிலில் ஏறிய பயணி ஒருவர், ரயில் படிக்கட்டை தொட்டு வணங்கி ஏறினார். அந்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இதனை தொழிலதிபர் ஆனந்த் மகேந்திராவும் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

‘இதுதான் இந்தியாவின் ஆன்மா.. நாங்கள் அதை ஒருபோதும் இழக்க மாட்டோம் என பிராத்திக்கிறேன்’ என அவர் பதிவிட, அந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

Views: - 0

0

0