வேணாம் பிலிப்ஸூ… கோட்டை தாண்டி வந்த அவ்ளோதான்!

23 January 2021, 4:45 pm
Quick Share

மூடப்பட்டிருக்கும் கேட்டுக்கு இருபுறமும் நின்று கொண்டிருக்கும் நாய்கள், கேட் மூடப்பட்டிருக்கும் போது குறைத்து சண்டையிடுவதும், கேட்டை திறந்தால் அமைதியாகி விடுவதும் என இருக்கும் வீடியோ ஒன்று, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நம்மில் பலரும் மனைவி முன் பொட்டி பாம்பாய் அடங்கிவிடுவதும், அவர் இல்லாத போது வீண் ஜம்பம் அடிப்பதும் என வாழ்க்கையை நகர்த்தி வருகிறோம். அதுபோன்று தாய்லாந்தில் நடந்த ஒரு சம்பவம் தான் தற்போது வைரலாகி இருக்கிறது. தாய்லாந்து நாட்டில், கிழக்கு பகுதியில் உள்ள ரயோங் என்ற கிராமத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கிறது.

வீடியோவில், அங்கிருக்கும் வீடு ஒன்றில் வளர்க்கப்படும் நாய் கேட்டுக்கு உள்ளே நிற்க, தெருவில் சுற்றித்திரியும் நாய் கேட்டுக்கு வெளியே நின்று கொண்டிருக்கின்றன. தெரு நாய், வீட்டு நாயை பார்த்து முதலில் குரைத்திருக்கிறது. பதிலுக்கு வீட்டு நாயும் ஆக்ரோஷமாக குரைக்கிறது.

கேட் மூடப்பட்டிருக்கும் போது, நீ பெரிய ஆளா.. நான் பெரிய ஆளா.. என குரைத்து சண்டையிடுகின்றன. அப்போது வீட்டின் உரிமையாளர், மெல்ல கேட்டை திறக்கிறார். சண்டையிட்ட இந்த நாய்கள், கேட்டை திறந்த மறுநொடியே அமைதியாகி விடுகின்றன. மீண்டும் கேட்டை அவர் மூடியவுடன், குரைக்க ஆரம்பித்து விட்டன. இப்படி கேட் திறக்கும் போதெல்லாம் நட்பு பாராட்டுவதும், கேட்டை மூடும் போதெல்லாம் சண்டையிடுவதும் என அதகளம் செய்த இந்த நாய்கள், நெட்டிசன்களுக்கு சிரிப்பை வரவழைக்கின்றன.

மொபைல் போனில் எடுக்கப்பட்ட இந்த காட்சிகள், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து பலரும் கமெண்டில், ‘இந்த கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது… நானும் வரமாட்டேன்’ என்பது போல் நகைச்சுவையாக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Views: - 2

0

0