‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்’: காலை இழந்த யானைக்கு செயற்கை கால்..!!

19 April 2021, 12:56 pm
elephant fakeled - updatenews360
Quick Share

ஒற்றை காலை இழந்த யானைக்கு பாகன் ஒருவர் செயற்கை காலை பொருத்தி அதனை நடக்க வைத்து மகிழும் வீடியோ இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

தனது முன்பக்க கால் ஒன்றை இழந்த யானைக்கு செயற்கை கால் ஒன்றை பொருத்தி அதனை நடக்க வைத்துள்ளனர். அதனால் யானை எப்போதும் போல் நடக்க முடியும், மனிதனுக்கும் யானைக்கும் உள்ள பந்தம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.மனிதன் யானையை கடவுளாக பார்க்கின்றான்.

கால் ஒன்றை இழந்த யானைக்கு செயற்கை காலை பொருத்துகிறார் யானை பாகன். அதுவரை யானை அசையாமல் நிற்கின்றது செயற்கைக்கால் பொருத்தியதும் யானை அழகாக நடந்து செல்கிறது. இந்த வீடியோ தற்போது ட்விட்டர் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

செயற்கை கால் பொருத்திய பிறகு யானை தானாக நடந்து சென்று வாழைப்பழத்தை உண்டு மகிழ்கிறது. இந்த வீடியோ பதிவை ” யானையை நம்மால் நடக்க செய்ய முடிந்தால், எதையும் சாதிக்க முடியும்” என்ற தலைப்பில் நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Views: - 36

0

0