இன்டர்நெட்டை ஸ்தம்பிக்க செய்யும் 62 வயது பாட்டி! அப்படி ஒரு டான்ஸ் போங்க..

5 March 2021, 3:30 pm
Quick Share

மும்பையை சேர்ந்த 62 வயது பாட்டி ஒருவர், தனது அசத்தல் டான்ஸ் மூலம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளார். அவரது வீடியோவை பார்க்கும் அனைவருக்கும், வயது என்பது வெறும் எண் தான் என்பது தெளிவாக விளங்கும்.

நீங்கள் வயதாகிவிட்டதாக உணர்கிறீர்களா? 62 வயதான ரவி பாலா ஷர்மா, உங்களுக்க உத்வேகம் அளிப்பார். தனது கனவினை நனவாக்க அவர் இன்னும் வேகம் காட்டிக் கொண்டு இருக்கிறார். உத்திர பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் பிறந்த இவர், தற்போது தனது மகனுடன் மும்பையில் வசித்து வருகிறார். நாட்டுப்புற பாடல்கள், பாலிவுட் பாடல்கள், பங்க்ரா என அவர் காட்டும் வெரைட்டி நடனத்தால், இன்டர்நெட் ஸ்தப்பித்து போய் இருக்கிறது. அவருக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பாலோயர்கள் உள்ளனர்.

ஷர்மாவுக்கு இரு குழந்தைகள். டில்லி அரசு பள்ளியில் இசை ஆசிரியராக 27 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். கதக், குரல், தபலாவில் பயிற்சி பெற்றிருக்கிறார். தற்போது நடனத்தில் ஈடுபாடு காட்டி, தனது இளவயது கனவை பூர்த்தி செய்து வருகிறாராம். பிரபல பாடகரான தில்ஜித் டோசன்ஜ் தனது வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தது தனக்கு உற்சாகத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியதாக ஷர்சா கூறுகிறார்.

‘‘வயது என்பது ஒரு எண் என்பதை நான் நிரூபித்துள்ளேன், உங்கள் வாழ்க்கையின் எந்த கட்டத்திலும் நீங்கள் அங்கீகாரம் பெற முடியும்’’ என உத்வேகமாக பேசி, அனைவருக்கும் நம்பிக்கையை விதைக்கிறார் இந்த 62 வயது நடன சூறாவளி..

Views: - 7

0

0