“குறைவான ஆடை” அணிந்த பெண் விமானத்தில் ஏற தடை… ஏன் தெரியுமா?

15 January 2021, 1:37 pm
Quick Share

ஆஸ்திரேலியாவில் அதிகமாக உடல் தெரியும்படி குறைவான ஆடை அணிந்திருந்த பெண்ணை விமான நிறுவனம் தங்களை விமானத்தில் ஏற்ற மறுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 23 வயது பெண்மணி கேத்ரீன் பேம்டன். இவர் கடந்த புதன்கிழமை ஆஸ்திரேலியாவின் அடியலைடு பகுதியிலிருந்து கோல்டு கோஸ்ட் பகுதிக்குச் செல்ல விர்ஜின் ஆஸ்திரேலிய விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். அதன் படி அவர் விமான நிலைய வழிமுறைகளைக் கையாண்டு விமானத்தில் ஏறுவதற்காகக் காத்துக்கொண்டிருந்தார்.

அப்பொழுது விர்ஜின் ஆஸ்திரேலியா விமான நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் கேத்ரீனிடம் வந்து கேத்ரீன் அதிகமாக உடல் தெரியும்படி குறைவான ஆடைகளை அணிந்திருக்கிறார். அதனால் அவரை விமானத்திற்குள் ஏற அனுமதிக்க முடியாது. கேத்ரீன் வேறு மேலாடையை அணிந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு குழப்பத்தில் மூழ்கிய கேத்ரீன் விமான டிக்கெட் பதிவு செய்யப்படும் போது ஆடை கட்டுப்பாடுகள் குறித்து எந்த வித விதிமுறைகளும் இல்லை என வாதாடியுள்ளார். இருந்தாலும் விமான நிறுவன ஊழியர்கள் அவரை விமானத்திற்கு ஏற அனுமதிக்கவில்லை. இந்த புதிய சட்டத்தைக் கேட்டு மற்ற பயணிகளும் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்துகேத்ரீன் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு விமான பயணத்தின் போது தான் அணிந்திருந்த ஆடையுடன் புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார்.

இது குறித்து அந்த விமான நிறுவனமும் இதுவரை எந்த விரிவான விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 10

0

0