ஆட்டோ டிரைவரின் நேர்மைக்கு கிடைத்த பரிசு – பெங்களூருவில் ருசிகர சம்பவம்
7 February 2021, 7:49 pmதனது ஆட்டோவில், ரூ. 2.6 லட்சம் அளவிலான பணத்தை தவறவிட்ட பயணியிடம், ஆட்டோ டிரைவர் திருப்பி தந்த நிகழ்வு, அவரை பாராட்டி, அப்பயணி மற்றும் போலீஸ் பணவெகுமதி அளித்த சம்பவம், பெங்களூருவில் அரங்கேறியுள்ளது.
பெங்களூரு கே ஆர் புரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் டி. குமார். இவர் மும்பையை சேர்ந்த அமித் குமார் பாண்டேவை, காட்டன்பேட்டில் இருந்து ஏற்றிக்கொண்டு, சாமராஜபேட்டில் இறக்கிவிட்டுள்ளார். பின் மற்றொரு பயணியை, ஸ்ரீநகரில் இறக்கிவிட்டுள்ளார். அந்த பெண் பயணி பின்பக்கத்தில் ஏதோ ஒரு பை கிடப்பதாக குமாரிடம் தெரிவித்துள்ளார். அந்த பையை சோதித்த குமார், அதில் பணம் இருப்பதை கண்டார். தன் ஆட்டோவில் முதலில் ஏறிய பயணியோடது என்பதை அறிந்த குமார், சாமராஜ்பேட்டையில், அவர் சென்ற கடைக்கு சென்று விசாரித்தார்.
அந்த கடைக்காரர், பாண்டேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அந்த கடைக்கு போலீசார் உடன் பாண்டே வந்தார். அவரிடம் பணப்பை திருப்பி அளிக்கப்பட்டது. பணம் சரியாக இருப்பதை அறிந்த பாண்டே, குமாரின் நேர்மையை பாராட்டி, அவருக்கு, ரூ. 3 ஆயிரம் வெகுமதியாக வழங்கினார்.
போலீஸ் கமிஷனர், குமாரின் நேர்மையை பாராட்டி, அவருக்கு மேலும் ரூ.5 ஆயிரம் வெகுமதியாக வழங்கி அவரை கவுரவித்தார்.
தான் ஏழ்மையில் வாடிய போதிலும்,
பிறர் பணத்திற்கு ஆசைப்படாமல், தான் கண்டெடுத்த பணத்தை , உரியவரிடமே,ஆட்டோ டிரைவர் குமார் சேர்த்த நிகழ்வு,சாமராஜ்பேட்டை பகுதியில், குமாரின் பெருமையை அனைவரும் தெரியும்படி செய்துள்ளது என்றே கூற வேண்டும்.
0
0