தலைகீழான தலையுடன் பிறந்த குழந்தை! 44 வயதில் உயிர் வாழும் அதிசயம்!!

29 March 2021, 12:11 pm
Upside Down Head -Updatenews360
Quick Share

பிரேசிலில் தலைகீழான தலையுடன் குழந்தை ஒன்று பிறக்க, அடுத்த 24 மணி நேரத்தில் குழந்தை இறந்து விடும் என டாக்டர்கள் கைவிரித்து விட்டனர். ஆனால் அந்த குழந்தைக்கு இப்போது 44 வயது! அதிசயம் தான்!!

“தலைகீழாக” தலையுடன் பிறந்து 24 மணிநேரம் வாழ்வார் என்று எதிர்பார்க்கப்படாத ஒரு பிரேசிலிய மனிதனுக்கு இன்று 44 வயது. பிரேசிலின் பஹியா என்ற ஊரை சேர்ந்த கிளாடியோ வியேரா டி ஒலிவேரா என்பவர், ஆர்த்ரோகிரிபோசிஸ் மல்டிபிளக்ஸ் கன்ஜெனிடா என்ற நிலை காரணமாக தலைகீழான தலையுடன் பிறந்தார். கால் தசைகளில் தசைக் குறைபாடு உள்ளதால், அவரது கைகள் அவரது மார்பில் சிக்கியுள்ளன. மேலும், எல்லா வழிகளிலும் திரும்பும் அவர் தலையை அவர் முதுகு தாங்கி பிடித்திருக்கிறது.

ஆனால் அவர் பிறந்த போது, 24 மணி நேரத்தை கடப்பார் என டாக்டர்கள் எதிர்பார்க்கவில்லை. அதிசயிக்கத்தக்க வகையில், 44 வயதில் தற்போதும் அவர் உயிருடன் இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘நான் ஒருபோதும் சிரமங்களை சந்தித்ததில்லை. என் வாழ்க்கை இயல்பாகவே இருக்கிறது. கொரோனாவை கண்டு பயம் கொள்கிறேன். இந்த மோசமான நோயிலிருந்து கடவுள் என்னை காப்பாற்றுவார். நான் இருமடங்கு கவனமாக இருக்கிறேஜ். ஒரு வருடத்திற்கும் மேலாக தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறேன். வங்கிக்கு செல்வது போன்ற அத்தியவசியத்திற்கு மட்டும் வெளியே வருகிறேன்’’ என்றார்.

வீட்டிலிருந்தே தாயின் உதவியுடன் எழுது படிக்க கத்து கொண்டிருக்கிறார் இந்த தன்னம்பிக்கை மனிதர். பார்ப்பது, சுவாசிப்பது, சாப்பிடுவது, குடிப்பதில் இவருக்கு எந்த சிக்கலும் வந்தது கிடையாது. இவர் தனது வாழ்க்கையை ஆடியோ பயோகிராபியாக, டிவிடி பதிவு செய்திருக்கிறார். கொரோனா கட்டுக்குள் வந்தால், தனது இயல்பு வாழ்க்கையை வாழவும் அவர் திட்டமிட்டிருக்கிறார். பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்பது அவர் ஆசையாம். வாழ்க வளமுடன்!!

Views: - 0

0

0