கோழி மிதிச்சு குஞ்சு சாகாது.. ஆனா ஒட்டகச்சிவிங்கி மிதிச்சா..?

19 January 2021, 7:48 pm
Quick Share

மிருகக்காட்சி சாலையில், ஒட்டகச்சிவிங்கி ஒன்று அழகிய குட்டி போட்ட மகிழ்ச்சியில் இருந்த போதே, பிறந்த சில நாட்களிலேயே அந்த குட்டி தாயின் கால் மிதிபட்டு உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாஸ்விலே மிருகக்காட்சி சாலையில் உள்ள நாஷா என்ற 6 வயது நிரம்பிய ஒட்டகச்சிவிங்கி, கடந்த சனிக்கிழமை அன்று, குட்டி ஒன்றை ஈன்றது. தங்கள் ஜூவுக்கு புதுவரவு வந்த மகிழ்ச்சியை அறிவித்த அதன் நிர்வாகம், அடுத்த சில நாட்களிலேயே சோகத்தில் மூழ்கியது. அப்படி என்ன நடந்தது தெரியுமா?

நாஷா குட்டி ஈன்றெடுத்தபின், தவறுதலாக தன் குட்டியை மித்ததில், அதன் கழுத்தில் மிதி பட்டு, குட்டி உயிரிழந்தது. இதுகுறித்து மிருகக்காட்சி தனது அறிக்கையில், ‘நாஷாவின் கால், புதிதாக பிறந்த குட்டியின் மேல் கவனக்குறைவாக பட்டது. அடிபட்ட குட்டியை காப்பாற்ற முயற்சித்த போதும், அது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இருப்பினும் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என ஆராயப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக கடினமான சூழலில் நாங்கள் இருந்த போது, ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி. நாஷாவின் குட்டியை இழந்ததில், நாங்கள் மிகவும் கவலையில் உள்ளோம்’ என தெரிவித்துள்ளது.

ஒட்டகச்சிவிங்கி இனம் கடந்த 30 ஆண்டுகளில் 50 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது என ஒட்டகச்சிவிங்கி பாதுகாப்பு அறக்கட்டளை தெரிவித்துள்ளது. குட்டியை இழந்த சோகத்தில் இருக்கும் நாஷாவை, மிருகக்காட்சி சாலை ஊழியர்கள் கவனமாக பார்த்து வருகின்றனர். தாயக்கு தானே தெரியும் குட்டியை இழந்த வலி..! பாவம்..!

Views: - 8

0

0