நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும் – இந்த நாடுகளில் வரியே கிடையாதாம்!!

Author: Udayaraman
7 February 2021, 8:32 pm
Quick Share

பஹ்ரைன், புருனே, பெர்முடா உள்ளிட்ட நாடுகளின் குடிமகன்கள், வரியே செலுத்துவது இல்லையாம். ஏனெனில், அந்த நாடுகளில் வரிவிதிப்பு முறையே கிடையாதாம்….

ஒவ்வொரு நாடும் தாங்கள் வகுத்துள்ள வரிவிதிப்பு முறைகளை கொண்டு, தங்கள் நாட்டு மக்களிடம் இருந்து வரிகளை வசூலித்து வருகிறது. இந்த வரிகளை, மக்கள் நிதியாண்டின் முடிவில் தாக்கல் செய்வதால், அந்த நாடுகளின் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. சில நாடுகளில் வரிவிகிதம் மிகக்குறைவாகவே உள்ளது. எண்ணெய், பெட்ரோல் போன்ற இயற்கை வளம் மிக்க நாடுகள், அதன்மூலம் கிடைக்கும் வருவாயே போதும் என்றெண்ணி, தங்கள் நாட்டு மக்களிடம் வரிகளை வசூல் செய்வதில்லை. அப்பேற்பட்ட அற்புத நாடுகள் குறித்து இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்வோம்.
 
பஹ்ரைன்

எண்ணெய் வளம் அதிகம் கொண்ட பஹ்ரைன் நாட்டில், கார்பரேட் வரிகளின் மூலம் கிடைக்கும் வருவாய் தேவையில்லை என்று அந்நாடு அறிவித்துள்ளது. அதற்குப்பதிலாக, அந்நாட்டு மக்கள் தங்களது சம்பளத்திலிருந்து 6 முதல் 9 சதவீதம் வரை, நாட்டிற்கு சமூக பாதுகாப்பிற்கு தங்களது பங்களிப்பாக வழங்கி வருகின்றனர்.

புருனே

புருனே நாட்டில் தனி நபர் வரி, விற்பனை வரி, மதிப்புக் கூட்டுவரி என எந்த வரியும் இல்லை. அந்நாட்டின் புராவிடண்ட் நிதிக்காக, அனைவரும் தங்களது சம்பளத்தில் இருந்து 5 சதவீத பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
 
பெர்முடா

யுனெடெட் கிங்டமின் எல்லையாக அமைந்துள்ள பெர்முடா நாட்டில், தனி நபர், கார்பரேட் வரிகள் இல்லை.
 
மொனாக்கோ

மொனாக்கோ நாட்டில் 6 மாதங்கள் இருந்தாலே, அந்நாடு நமக்கு அந்நாட்டின் குடியுரிமையை வழங்கி விடுகிறது. இந்த நாட்டின் குடிமகன்களுக்கு, வரிகள் கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
 
ஓமன்

வளைகுடா நாடான ஓமனில், எளியமுறை வரிவிதிப்பே உள்ளது. அந்நாட்டு பிரஜைகள் யாரும் தங்களது சம்பள அடிப்படையில் வரிகள் கட்டுவதில்லை.
 
கத்தார்

கத்தார் நாட்டிலும் வரிவிதிப்பு இல்லா நிலையே நிலவி வருகிறது. கத்தார் நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு குறிப்பிட்ட அளவில் வரி விதிக்கப்பட்டு வருகிறது.
 
சவுதி அரேபியா

உலகின் பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவுதி அரேபியாவில், தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் வரிகள் இல்லை. சமூக பாதுகாப்பிற்காக, அந்நாட்டு பிரஜைகள், சிறிய அளவில் தங்களது பங்களிப்பை செலுத்தி வருகின்றனர்.
 
குவைத்

உலகின் 6 சதவீத எண்ணெய் வளங்களை, குவைத் நாடு தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த எண்ணெய் வள வர்த்தகத்தின் மூலமாகவே, குவைத் நாட்டிற்கு 90 சதவீத வருவாய் கிடைத்துவிடுவதால், மக்களுக்கு என்று தனியாக வரி இல்லை.
 
பஹாமாஸ்

கரீபிய நாடா பஹாமாஸில், தனிநபர் சம்பளம் அடிப்படையிலான வரிகள் அங்கு அல்லை.  சுற்றுலாவின் மூலமாகவே, அந்நாட்டிற்கு போதிய வருவாய் கிடைத்து விடுகிறது.
 
கேமென் தீவுகள்

பிரிட்டன் எல்லையில் அமைந்துள்ள இந்த கேமென் தீவில், மக்களுக்கு என்று தனியாக வரிகள் இல்லை.
 
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

எண்ணெய் வளம் மிக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸில், உலகிலேயே தனிநபர் வருமானம் இங்குதான் அதிகம் ஆகும். இங்கும் தனிநபர் வரி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 45

0

0