இத சாப்பிட்டதும் இல்லாம கருத்து வேறயா? : யார்றா நீங்கலாம்?

22 January 2021, 7:01 pm
Quick Share

நீங்கள் இதற்குமுன் மாட்டுச்சாண வரட்டியை சாப்பிட்டதுண்டா? இதுபோன்ற கேள்விகளும், அதற்கான பதில்களும் தான் தற்போது இன்டர்நெட்டில் டிரென்டிங் ஆகி வருகின்றது என்பதை நம்ப முடிகின்றதா?. நம்பித்தான் ஆகணும்.

அமேசானில் மாட்டுச்சாண வரட்டியை, ஆன்லைன் முறையில் பெற்ற ஒருவர், அதை புனித சடங்குகளுக்கு பயன்படுத்தாமல், அதை ருசித்து பார்த்தோடு மட்டுமல்லாது, அதன் சுவை குறித்து மற்றவர்களிடமும் விவாதித்துள்ள நிகழ்வு ஆன்லைனில், பெரும் பேச்சுப்பொருளாக மாறி உள்ளது.

வரட்டியை சுவைத்த நபர், அமேசான் இணையதளத்திலேயே, அதன் சுவை குறித்து பதிவிட்டுள்ளார்.  இந்த சுவை அபத்தமாக இருந்தது. ஏதோ சகதி போல் இருந்தது, மொறுமொறுப்பு இல்லை என்று அவர் பதிவிட்டுள்ளதோடு மட்டுமல்லாது, அதன் பிராண்டையும் குறை கூறியுள்ளார்.

இதுமட்டுமல்லாது, இதை சாப்பிட்டதனால், தனக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.  எனவே இதை தயாரிக்கும்போது நீங்கள் கூடுதல் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த பொருளை நீங்கள் மேலும் மொறுமொறு சுவையுடன் தயாரிக்க வேண்டும் என்று அந்த நபர், அமேசான் இணையதளத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புராடக்ட் ரிவியூ, அவ்வளவாக பிரபலமாகாத நிலையில், டாக்டர் சஞ்சய் அரோரா, தனது டுவிட்டர் பக்கத்தில் அதை பகிர்ந்து இருந்தார். பின்னர் அது வைரலாக பரவ துவங்கியது. இந்த பதிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள டாக்டர் அரோரோ, மாட்டுச்சாண வரட்டியின் பாக்கெட்டின் முன்பகுதியிலேயே, இது உணவுப்பொருள் அல்ல.

பூஜைக்கு பயன்படுத்தக் கூடியது என்று குறிப்பிடப்பட்டுள்ளதை,  அந்த நபர் கவனிக்க தவறியதாலேயே, இந்த அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.  இதுபோன்ற நிகழ்வுகள், இந்தியாவில் மட்டுமே சாத்தியம் என்று அரோராவின் டுவிட்டர் பதிவுக்கு பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Views: - 7

0

0