விலை உயர்ந்த 26 சைக்கிள்களை திருடிய மும்பை மாணவன்! அதன் விலை தெரியுமா?

13 April 2021, 3:57 pm
Quick Share

போதைக்கு அடிமையாகிய ஒன்பதாம் வகுப்பு படிக்கும் டீன் ஏஜ் மாணவன் ஒருவன், போதை வஸ்துக்களை வாங்குவதற்காக 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள 26 சைக்கிள்களை திருடியிருக்கிறான். தற்போது சைக்கிள்கள் அனைத்தையும் போலீசார் மீட்டிருக்கின்றனர்.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், கண்டிவாலி பகுதியில், சமீபத்தில் சைக்கிள் திருட்டு அடிக்கடி நடந்து வந்திருக்கிறது. இந்நிலையில் அங்கிருக்கும் குடியிருப்பு ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தில் இருந்து பெண் ஒருவரின் சைக்கிள் திருடு போயிருக்கிறது. இதுகுறித்து அவர் போலீசாரிடம் புகார் அளித்து, சிசிடிவி காட்சிகளையும் ஒப்படைத்தார். சிசிடிவி காட்சிகர் அடிப்படையில் திருடனை தேடி வந்த போலீசார் 17 வயது மாணவன் தான் திருடினார் என்பதை கண்டறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் டீன் ஏஜ் சிறுவனான திருடன், போதை பழக்கத்திற்கு அடிமையாகி, போதை வஸ்துக்களை வாங்க பணம் தேவைப்பட சைக்கிள்களை திருடி இருக்கிறான். போலீசாரிடம் 26 சைக்கிள்களை தான் திருடி இருப்பதாக அவன் ஒப்புக் கொண்டான். தற்போது அனைத்து சைக்கிள்களையும் போலீசார் மீட்டுள்ளனர். அவன் திருடிய சைக்கிள்களின் மொத்த விலை 4 லட்ச ரூபாய் ஆகும்.

இதுகுறித்து வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘விசாரணையில் 26 சைக்கிள்களை திருடியதை அவன் ஒப்புக் கொண்டான். தனது பெற்றோர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் சிகிச்சைக்கு பணம் தேவை என்றும் முன்பின் தெரியாதவர்களுக்கு சைக்கிள்களை விற்றுள்ளான். அதன் மூலம் கிடைக்கும் பணத்தில், போதை பொருட்களை வாங்கி இருக்கிறான்’’ என தெரிவித்தார்.

Views: - 52

0

0