குதிரைக்கு தடபுடலாக பிறந்தாள் கொண்டாட்டம்! எத்தனை கிலோ கேக் வெட்டுனாங்க தெரியுமா?

6 March 2021, 8:56 am
Quick Share

பீகாரில் கோலு என்பவர் தான் செல்லமாக வளர்த்து வரும் சேடக் என்ற குதிரையின் பிறந்தநாளுக்கு 22 கிலோ கேக் வெட்டி கொண்டாடினார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொதுவாக நாம் நமது குழந்தைகளுக்கு தான் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவோம். அதுவும் பலர் பட்ஜெட் போட்டு தான் கொண்டாடுவார்கள். ஆனால் இந்த நபரை பாருங்கள். தனது குதிரையின் பிறந்தநாளுக்கு, ஊரையே அழைத்து, சைவம், அசைவம் என தடபுடலாக விருந்து சமைத்து போட்டு, 22 கிலோ கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.

பீகாரின் சஹர்சா மாவட்டத்தில் உள்ள பஞ்சவதி சவுக்கில் வசிக்கும் கோலு யாதவ் என்பவர், சேடக் என்ற இரண்டு வயது நிரம்பிய குதிரையை வளர்த்து வருகிறார். 6 மாத குட்டியாக இருந்த போது சேடக், கோலுவிடம் வந்திருக்கிறது. அப்போது முதல், தனது குழந்தையை போல அவர் அதனை கவனித்து வருகிறார். அதன் முதல் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய கோலு, சமீபத்தில் அதன் இரண்டாவது பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடினார். 22 கிலோ கேக் மீது குதிரையின் படம் அச்சிட்டு, அதனை கோலு வெட்டி மகிழ்ந்தார்.

பின் பட்டாசு வெடித்து சேடக்கின் பிறந்தநாளை கொண்டாடினார். இதில் ஊர் மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தனது பிறந்தநாளை இதுவரை கொண்டாடியது இல்லை எனவும், ஆனால் சேடக்கின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுவேன் எனவும் கோலு தெரிவித்தார். தனது சொந்த குழந்தையை விட சேடக்கின் மீது தனக்கு அன்பு அதிகம் எனவும் அவர் கூறுகிறார்.

Views: - 4

0

0