வீட்டு வேலை செய்ய நாய் ரோபோ! வைரலாகும் ‘ஸ்பாட்’

5 February 2021, 9:17 pm
Quick Share

நாய் ரேபானான ‘ஸ்பாட்’, நடனம் ஆடுவது மட்டுமன்றி, காலணிகளை எடுத்து வருவது, அழுக்கு துணிகளை எடுத்து தருவது, கதவுகளை திறப்பது, பூச்செடிகளை நடுவது என பல செயல்களை செய்து அசத்தி, நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

மனித வேலைகளுக்கு மாற்றாக, செயற்கை நுண்ணறிவு கம்ப்யூட்டர் ரோபோக்கள் (ஏஐ), வருங்காலத்தில் அசுர வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் கண்டுபிடிக்கப்படும் புதிய கண்டுபிடிப்புகள், வளர்ந்து வரும் டெக்னாலஜி அவை சாத்தியம் தான் என்பதை நமக்கு சொல்லாமல் சொல்லி வருகிறது. இந்த வரிசையில், ‘ஸ்பாட்’ என்ற நாய் ரோபோ பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அமெரிக்க ரோபாட்டிக்ஸ் நிறுவனமான பாஸ்டன் டைனமிக்ஸ், கடந்த வாரம், நான்கு கால் கொண்ட ‘ஸ்பாட்’ ரோபர்ட்டின் புதிய வெர்ஷனை வெளியிட்டுள்ளது. ஒரு கை மற்றும் தன்னைத்தானே சார்ஜ் செய்யும் திறனுடன் அது உள்ளது. இந்த நாய் ரோபோ, டான்ஸ் ஆடுவது மட்டுமல்லாமல், காலணிகள், அழுக்கு துணிகளை எடுத்துவருவது, கதவுகளை திறப்பது மேலும் பூச்செடிகளை நடுவது வரை பல செய்லகளை செய்து அசத்தி, அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் 74,500 டாலர்களுக்கு விறபனை ஆன ஸ்பாட் ரோபர்ட்கள், 400க்கும் மேல் விற்பனையாகின. பெரும்பாலானோர் அதற்கு பொருட்களை பிடிக்க கை ஒன்று இருக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர். வாடிக்கையாளர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் விதத்தில், இந்த அப்டேட் ரோபோவை அதன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனால் அதன் டிமாண்ட் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 0

0

0