திருமண ரிசப்ஷன் நிகழ்வில் ஆச்சர்ய செய்தி வெளியிட இருந்த மருமகளுக்கு கிடைத்த அதிர்ச்சி

2 May 2021, 7:21 pm
Quick Share

தான் கர்ப்பமாக இருந்ததை, ரிசப்ஷனில் தெரிவிக்க இருந்த தனக்கு, மாமியார் தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்த செய்தி தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்ததாக மருமகள் தெரிவித்து உள்ளார்.

திருமணத்திற்கு முன்னரே, தான் கர்ப்பமானதை, இந்த ரிசப்சன் நிகழ்ச்சியில் வெளியிட காத்திருந்த மணமகளுக்கு, தான் கர்ப்பமாக இருப்பதாக, அந்த நிகழ்ச்சியில், மாமியார் தெரிவித்த நிகழ்வு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக, ரெட்டிட் செயலி மூலம் அந்த இளம்பெண் பகிர்ந்து கொண்டுள்ளதாவது, திருமண ரிசப்சன் நிகழ்ச்சிக்கு நெருங்கிய உறவினர்கள் உள்ளிட்ட சிலரே அழைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிகழ்வில், தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவிக்க நான் திட்டமிட்டு இருந்தேன்.

எல்லா சடங்குகளும் முடிந்து அனைவரும் சாப்பிட போவதற்கு முன், மாமியார் முக்கிய செய்தி சொல்லப்போவதாக அறிவித்தார். என்ன சொல்லப்போகிறார் என்று எல்லாரும் நினைத்து இருக்கையில், தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அவர் அறிவித்தார்.

இதன்காரணமாக, தான் சொல்ல வந்த செய்தியை சொல்லாமல் தவிர்த்து விட்டேன். எங்களது ஆனந்தத்தை அவர் பறித்து விட்டார் என்று நினைத்து, சிலநாட்கள் அவருடன் பேசாமல் இருந்ததாக அந்த இளம்பெண் குறிப்பிட்டு உள்ளார்.

தான் சுயநலமாகவும், மிகைப்படுத்திய நாளாக எண்ணியதன் மூலம், அந்த நாளின் சிறப்பை தான் இழந்துவிட்டதாக அவர் மேலும் தெரிவித்து உள்ளார்.

Views: - 31

0

0