விண்ணுக்கு அனுப்பப்பட்ட சமோசா.. எதுக்கு தெரியுமா?

13 January 2021, 1:16 pm
Quick Share

பிரிட்டனில் உள்ள இந்திய ஹோட்டல் ஒன்று, சமோசாவை ஹீலியம் பலூனில் வைத்து, வளிமண்டல அடுக்கை தாண்டி விண்ணுக்கு வெற்றிகரமாக அனுப்பியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பிரிட்டனின் பாத் நகரில் உள்ள இயங்கி வரும் இந்திய ஹோட்டல் ‘‘சாய் வாலா’’. இந்தியாவைப் பூர்விகமகாக் கொண்ட நிராக் காதர் என்பவர் இந்த ஹோட்டலை நடத்தி வருகிறார். இவர் தனது கடை சமோசாவை விண்ணுக்கு அனுப்ப முயற்சித்து 2 முறை தோல்வி அடைந்த நிலையில், 3வது முயற்சியில் வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பி உள்ளார்.

இந்த ஐடியாவை செயல்படுத்த ஹீலியம் பலூன்களை காதர் பயன்படுத்தி இருக்கிறார். முதல் முறை சமோசாவை பலூனுடன் இணைக்கும் முன்னும், இரண்டாவது முறை ஹீலியம் தீர்ந்து போனதாலும், அவரது இந்த முயற்சி தோல்வியில் முடிந்திருக்கிறது. ஹீலியம் பலூனில் ஜிபிஎஸ் டிராக்கர், கேமராவை இணைத்திருந்ததால், 2வது முயற்சியின் போது பலூன் விண்ணுக்கு போகாதது தெரிந்தது. மேலும், பிரான்சில் பலூன் விழுந்தது காதருக்கு தெரியவர, அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். பிரான்சின் பிகார்டே பகுதியில் அந்த சமோசா கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், 3வது முறையாக அவரது முயற்சி வெற்றி அடைந்தது. ஹீலியம் பலூனில், வளிமண்டல அடுக்கை தாண்டி சமோசா பயணிக்கும் வீடியோவை, காதர் பகிர்ந்துள்ளார். அவரது இந்த முயற்சியை பாராட்டிய நெட்டிசன்கள், அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

பலூன் ஐடியா குறித்து காதர் கூறுகையில், ‘‘கொரோனா காலத்தில் சோகத்தில் இருக்கும் மக்களை சற்று உற்சாகப்படுத்த, சமோசாவை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கினேன்’’ என்றார்.